அஜீத்குமார் 62 படத்தில் இருந்துவிலகிய விக்னேஷ் சிவன்

துணிவு’ படத்திற்குப் பிறகு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்தாண்டு மார்ச் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது ‘துணிவு’ படம் வெளிவந்த பின் உடனடியாக இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த இரு வாரங்களாக Ak62 படம் சம்பந்தமான தகவல் சமூக வலைதளங்களில் பிரதானமாக இடம்பெற்றது படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாகவும் அவருக்குப் பதிலாக மகிழ்திருமேனி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. லண்டனில் உள்ள லைகா அலுவலகத்தில் அதன் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுடன் அஜித்குமார்,விக்னேஷ் சிவன் இருவரும் தனி தனியாக பேச்சு வார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது ஆனால் படத்தை தயாரிக்கபோகும் லைகா, நாயகன் அஜீத்குமார், இயக்குநர் விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து எந்தவிதமான தகவல், அறிக்கை வெளியிடப்படவில்லை இந்நிலையில்தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இருந்து

 ‘ஏகே 62’ என்ற வார்த்தையை நீக்கியுள்ளார் விக்னேஷ் சிவன், மேலும், தனது புரொபைலில் வைத்திருந்த அஜித்குமார் படத்தையும் மாற்றியுள்ளார். ‘ஏகே 62’ என்பதை நீக்கிவிட்டு தற்போது ‘விக்கி 6’ என்று சேர்த்துள்ளார். இதன் மூலம் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளது உறுதி ஆகியுள்ளது.தனது புரொபைலில், “ஒருபோதும் கைவிடாதே…நீங்கள் உண்மையில் செய்ய விரும்புவதைச் செய்ய முயற்சிக்கிறீர்கள்…அன்பும் உத்வேகமும் இருக்கும் இடத்தில் நீங்கள் தவறாகப் போக முடியாது,” என்ற வாசகத்தை புதிதாக சேர்த்துள்ளார். இதன் மூலம் Ak62 படத்தில் இருந்துவிக்னேஷ் சிவன் விலகியுள்ளார் என்பதை சமூக வலைதளம் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளார் இனி AK62 படத்தை இயக்கப்போவது யார் என்பதை லைகா நிறுவனம்தான் அறிவிக்கவேண்டும்