அடக்க முனைந்த மணிரத்னம் துடித்து எழுந்த துல்கர் சல்மான்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் 234 ஆவது படம் தக்லைஃப்.இப்படத்தில் த்ரிஷா ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் மட்டும் நடைபெற்றது. கமல்ஹாசன் கலந்து கொள்ளும்
இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என கூறப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் அதனையொட்டி அரசியல் பணிகள் இருக்கும் என்பதால் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகான தேதிகளை ஒதுக்கீடு செய்யவில்லை.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகுதான் கமல்ஹாசன் கால்ஷீட் கிடைக்கும் அதனையொட்டியே படப்பிடிப்புதொடங்கும்.
இந்நிலையில் படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மலையாள நடிகர் இருந்த துல்கர்சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர்  ஒப்பந்தத்தை ரத்து செய்து படத்தில் இருந்து அதிகாரபூர்வமாக விலகியிருக்கிறார்கள்.
வணிக மதிப்புள்ள ஜெயம் ரவி, துல்கர் சல்மான்இருவரிடமும் வாங்கிய தேதிகளைப் பயன்படுத்தாமல் வீணடித்திருக்கிறது படக்குழு
 மறுபடி மாற்று தேதிகள் கேட்டிருக்கிறார்கள்.அவ்வாறு கேட்ட தேதிகளில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பட வேலைகள் இருப்பதால் தேதி தர முடியவில்லை என்பதால் இருவரும் படத்திலிருந்து விலகியிருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அது உண்மையான காரணம் இல்லை என்கிறது துல்கர், ஜெயம்ரவிக்கு நெருக்கமான வட்டாரங்கள். மணிரத்னம் என்கிற இயக்குநர் நட்சத்திர நடிகரான துல்கர் இருவருக்குமானா ஈகோதான் அவர் படத்தில் இருந்து வெளியேற காரணம் என்றனர். அப்படியென்ன பிரச்சினை என்ற போது
துல்கர்சல்மான் நடிக்க ஒப்புக்கொண்ட பின், அவரை வைத்து புகைப்படங்கள் எடுக்கவேண்டும் என்பதற்காக மனிரத்னம் அலுவலகத்திலிருந்து பலமுறை அழைத்திருக்கிறார்கள். அந்த நாட்களில் வேறு படப்பிடிப்பு இருக்கிறதென்று சொல்லி துல்கர்சல்மான் வரவில்லை. அதன் பின்அழைத்தபோது மணிரத்னம்அலுவலகம் வந்த துல்கரை தரைத்தளத்தில் அமர வைத்திருக்கிறார்கள். சில மணி நேரங்கள்காக்க வைக்கப்பட்டிருக்கிறார். அத்துடன்
அவரை மணிரத்னம் வந்து பார்க்கவில்லை என்பதுடன் அவரை பார்க்கவும் துல்கரை கூட்டிப்போகவில்லை.
இதனால் கோபமுற்ற துல்கர் சல்மான் யாரிடமும் சொல்லாமல் அலுவலகத்தை விட்டு வெளியேறி சென்றிருக்கிறார்.அதன்பின் மணிரத்னம் அலுவலகத்திலிருந்து பலமுறை பேசியும் அவர் தொடர்பிலேயே வரவில்லை
இதனால்  மீண்டும் சிலம்பரசனிடம்
பேசி அவரை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.சிலம்பரசன் மீண்டும் வந்ததால் ஜெயம்ரவி வெளியேறிவிட்டார்.
அவருக்குப் பதிலாக நிவின்பாலி மற்றும் அருண்விஜய் ஆகியோரிடம் பேசிப்பார்த்தார்கள்  அவர்கள் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை .

அதன்பின்,மலையாள நடிகர் டொவினோதாமஸ் மற்றும் நடிகர் ஜீவா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்,இருவரில் யாருடைய தேதிகள் ஒத்துவருகின்றதோ அவரை நடிக்க வைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

துல்கர்சல்மான்சொல்லாமல்

கோபப்பட்டு வெளியேறிதால் அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக மலையாளத்திலிருந்தே ஒருவரை நடிக்கவைக்கப் போராடுகிறார் மணிரத்னம் அதனால்தான் முதலில் நிவின்பாலியைக் கேட்டார்கள்,அவர் இல்லையென்றதும் இப்போது டொவினோதாமஸிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என கூறுகின்றனர்.