நடிகர் அஜித்குமார் சினிமாவில் அறிமுகமாகி 30-ம் ஆண்டு நிறைவடைவதையொட்டி பாண்டிச்சேரி அஜீத்குமார் செய்த செயல் சுற்றுசூழல் ஆர்வலர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது
பாண்டிச்சேரிகடல்சார்ந்தபகுதியை ஒட்டியுள்ளதால் அரசியல்வாதிகள் பிறந்தநாள், நடிகர்கள் பிறந்தநாள், புதிய படம் வெளியீடு ஆகியவற்றை வரவேற்கும் வகையில் காந்தி சிலைக்கு பின்னர் கடலில் பயணம் செய்து அங்குள்ள இரும்பு கம்பிகளில் பேனர் கட்டி வந்தனர். இவைஆபத்தை விளைவிக்கும் செயல் என்பதால் போலீஸார் முறைப்படி அதை அனுமதிப்பதில்லை இருந்தபோதிலும்
அதையும் மீறி ரசிகர் மன்றம் சார்பில் அத்துமீறி பேனர்கள் வைக்கப்படுகின்றன கடந்த வாரம் சந்தானம் நடிப்பில் வெளியான குளுகுளு படத்திற்கு பேனர் கட்டி அது அலையால் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டது தற்போது
அஜித்குமார் ரசிகர்கள், நடிகர் அஜித் குமார் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை வரவேற்கும் வகையில் 60 அடி ஆழத்தில் ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன் பேனர் பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ஆழ்கடல் பயிற்சியாளர்கள் மூலம் பேனரை பிடித்தபடி இருக்கும் வீடியோ, புகைப்படங்கள் தற்போது பகிரப்பட்டு வருகிறதுபேனர் கலாசாரம் சாலையில் மட்டுமில்லாமல் தற்போது கடலுக்கு அடியிலும் வரத் தொடங்கியுள்ளது என்பதுடன் இது போன்ற செயல்கள் சுற்றுசூழலை மாசுபடுத்தும், கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை பாதிக்கும் உயிருடன் விளையாடும் இது போன்ற செயல்களை செய்பவர்கள் தண்டிப்பதுடன், தடுக்கவும் வேண்டும் என சமூக வலைதளங்களில் வேண்டுகோள்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன