அமரன் படத்தில் கடைசி 10 நிமிடம் என்னை உலுக்கிவிட்டது – ஜோதிகா

ஜெய் பீம்’ படத்துக்குப் பின் தமிழின் மற்றொரு க்ளாசிக் திரைப்படம் ‘அமரன்’. கடைசி 10 நிமிடத்தில் என் இதயத்தை உலுக்கிவிட்டது” என நடிகை ஜோதிகா ‘அமரன்’ படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

“அமரன் படக்குழுவினருக்கு சல்யூட். ‘ஜெய் பீம்’ படத்துக்குப் பின் தமிழின் மற்றொரு க்ளாசிக் திரைப்படம் ‘அமரன்’. வைரத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இந்தக் கதாபாத்திரத்துக்கு சிவகார்த்திகேயன் மேற்கொண்ட உழைப்பை எண்ணிப் பார்க்கிறேன். என்னவொரு அற்புதமான நடிப்பு சாய்பல்லவியிடமிருந்து…கடைசி 10 நிமிடத்தில் என் இதயத்தை உலுக்கிவீட்டீர்கள்.உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது.

இந்து ரெபேக்கா வர்கீஸ் உங்களின் தியாகமும், நேர்மறையான எண்ணமும் நெகிழவைக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஒவ்வொரு குடிமகனும் உங்களைக் கொண்டாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். உங்களைப்போன்ற வீரமும் தைரியமும் கொண்டவர்களாகவே எங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம். ரசிகர்களே, தயவுசெய்து இந்த வைரத்தை தவறவீடாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.