TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குநர் துவாரக் ராஜாவின் இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னனியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் ‘பரோல்’.இந்தப் படத்தில் R.S.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் பெரும் வரவேற்பை குவித்த நிலையில், இப்படம் வரும் நவம்பர் 11-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது.பட வெளியீட்டை ஒட்டி படக் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வினில் நடிகர் R.S.கார்த்திக் பேசும்போது,
“இந்தப் படம் ஒரு தாய்க்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையை பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமான படைப்பாக இருக்கும். அது போலவே இந்த படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஒன்றாக இருக்கும். இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது. இந்தப் படத்தின் வெற்றி, இது போன்று கதையம்சம் உள்ள படங்கள் வெற்றி பெற ஆரம்பப் புள்ளியாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.
நாஞ்சில் சம்பத் பேசும்போது,
“மிகவும் நுணுக்கமான கதையை அடையாளம் கண்டு, அதில் திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர். இந்தக் கதையில் அம்மாவிற்கும், மகனுக்குமான பாசத்தை அழகான திரைக்கதையாக வடிவமைத்து இருக்கிறார். வித்தியாசமான சிந்தனைகள் கொண்ட ஆட்கள் எப்பொழுதும் வெற்றி பெறுவார்கள் என்றார்
இயக்குநர் துவாரக் ராஜா பேசும்போது,
“இந்தப் படத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து எனக்கு முழு சுதந்திரம் கிடைத்தது. அவர் என்னை முழுமையாக நம்பினார். இந்தப் படம் ஒரு குடும்பத்தை பற்றிய கதை. குடும்பங்களில் நாம் பார்க்காத ஒரு பக்கத்தை பற்றிய கதை இது. அனைத்து நடிகர்களும் முழு அர்ப்பணிப்புடன் நடித்து கொடுத்தனர். இந்த படத்தின் கதைக் களத்தில் ஆண்களால் ஏற்படும் பிரச்சனையை, பெண்கள் தீர்ப்பதாய் இருக்கும். இந்தப் படத்தில் நடித்த பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த உணர்வுகளை சிறப்பாக கடத்தியுள்ளனர். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை.” என்றார்.
நடிகர் லிங்கா பேசும்போது, ”தயாரிப்பாளர் மதுவுக்கு சினிமா மீது அதிகமான காதலும், அர்ப்பணிப்பும் இருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதை ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும். நாங்கள் இதை வித்தியாசமான பாணியில் இருக்குமாறுதான் உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.
இசையமைப்பாளர் ராஜ்குமார் அமல் பேசும்போது,
“என்னைப் போன்ற ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது ஒரு கனவு படம். இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம். எனது திறமையை வெளிகாட்ட எனக்கு இதில் நிறைய ஸ்கோப் இருந்தது. நவம்பர் 11-க்கு பிறகு இந்தப் படம் அனைவருக்கும் சொந்தமானது. அனைவரும் தியேட்டரில் படத்தை பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.