ஓம் ரனாவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வருகிற 16ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். இராமாயணத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.இப்படத்தில் கீர்த்தி சானோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதற்காக தணிக்கை குழுவிற்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்ததணிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினரும், லண்டனை சேர்ந்த திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து படம் பற்றி அவரது கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதில், ஒரே வார்த்தையில் ஆதிபுருஷ் – டார்ச்சர் என பதிவு செய்துள்ளார். படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மோசமாக இருக்கிறது என்றும், பிரபாஸ் நடிப்பு பள்ளி சென்று நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த விமர்சனம் பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது