ஆர்கே. வெள்ளி மேகம் ஆடியோ வெளியீட்டு விழா

மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியுள்ள சைனு சாவக்கடன் ஆறாவது படமாக இயக்கியுள்ள படம் ஆர்.கே. வெள்ளி மேகம்.
படத்தில் விஜய் கௌரீஷ், ரூபேஷ் பாபு, சுனில் அரவிந்த், சுப்பிரமணியபுரம் விசித்திரன், அதிரா முரளி, சார்மிளா, வின்சென்ட் ராய் தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் பரிச்சயமான கொட்டாச்சி, சின்ராசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.படத்தின் கதையை யதுகிருஷ்ணன் எழுத, கோவை பாலு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

நேரடி தமிழ்ப் படமான ‘ஆர் கே வெள்ளிமேகம்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அதன் ஆடியோ, டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் படக்குழுவினரோடு, சிறப்பு விருந்தினராக சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச் செல்வன் கலந்து கொண்டார். விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் xxx கலந்து கொண்டனர்.

நிகழ்வில் படத்தின் கதாநாயகன் விஜய் கௌரீஷ் பேசியபோது,

 ”ரெண்டு வருஷம் முன்னே வந்த ‘ஜோதி’ படத்துல வில்லனா நடிச்சிருந்தேன். அடுத்து ‘ஸ்டார்ட் கேமரா ஆக்சன்’னு ஒரு படம் நடிச்சு ரிலீஸாகப் போகுது. அடுத்ததா இந்த வெள்ளிமேகம் படத்துல ஹீரோவா நடிச்சது மகிழ்ச்சியா இருக்கு. ‘வெள்ளி மேகம்’னா என்னன்னு இயக்குநர்கிட்டே கேட்டேன். வானத்துல மேகங்கள் தெரியுறதை பார்க்கிறோம். அது வெள்ளி உலோகம் மாதிரி பளீர் நிறத்துல பஞ்சு மாதிரி நம்ம கண்ணுக்குத் தெரியும். ஆனா, அந்த மேகத்தை நெருங்கிப் போய் பார்த்தா வேற மாதிரி இருக்கும். அதே மாதிரி படத்துல நீங்க ஒரு விஷயத்தை நினைப்பீங்க. ஆனா, கதை வேற மாதிரி போகும் என்றார்.
படத்தின் இயக்குநர் சைனு சாவக்கடன் பேசியபோது,
 ”சினிமாவுக்குள்ள சினிமாங்கிறதுதான் படத்தோட கதைக்களம். ரெண்டு இளைஞர்கள் சினிமா ஆசையில சென்னைக்கு வந்து வாய்ப்புகளுக்காக முயற்சி பண்றாங்க. அதுல அவங்க சந்திக்கிற விஷயங்களை, எதிர்பாராத திருப்பங்களோடு, சஸ்பென்ஸோடு கொடுத்திருக்கோம். அதுக்கு மேல இப்போ கதையை சொல்ல முடியாது. படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. படம் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார்.

சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புச் செல்வன் பேசியபோது

 மலையாளத்திலிருந்து தமிழ்ப் படம் எடுக்க வந்திருக்கார்னா அதை நாம எல்லாரும் வரவேற்கணும். அங்கிருந்து வர்ற மஞ்சுமல் பாய்ஸ். பிரேமலு’ன்னு எல்லா படங்களும் இங்கே ஜெயிக்குதுன்னா கன்ட்டென்ட்தான் காரணம். அதே மாதிரி நல்ல கன்டென்ட்டோட இந்த படம் தமிழ்ல வருது. இதுவும் இங்கே பெரியளவுல வெற்றி பெறும். அப்படி வெற்றி கிடைக்கிறப்போ இந்த படத்தோட தயாரிப்பாளர் மாதிரி இன்னும் நிறையப் பேர் தமிழ்ப் படம் எடுக்க முன்வருவாங்க.

சினிமா ஃபீல்டு நல்லாத்தான் இருக்கு. ஒருவரே எல்லா வேலையையும் செய்யாம யார் யாருக்கு என்னென்ன வேலை தெரியுமோ அதை செஞ்சாலே நல்ல சினிமாக்கள் வரும். வெற்றியடையும். சினிமாவை நேசிக்கிறவங்க நிச்சயம் ஜெயிப்பாங்க” என்றார்.

படத்தில் நடித்துள்ள சார்மிளா பேசியபோது, ”இந்த படத்துல ஹீரோவுக்கு அம்மாவா வர்றேன். நான் நிறைய மலையாளப் படங்கள் நடிச்சிருக்கேன். இந்த படத்துக்காக கூப்பிட்டபோது ஏதோவொரு சாதாரணப் படமாத்தான் இருக்கும்னு நினைச்சு போனேன். ஆனா, அப்படியில்லாம வேற மாதிரி அனுபவம் தர்ற படமா இருந்துச்சு” என்றார்.