நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக டிரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா நடிக்கும் 45-வது படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆர்.ஜே.வாக இருந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி. ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
Prev Post