இந்தத் தலைப்பு ‘இது மிருகங்கள் வாழும் இடம் ‘ என்று இருக்க வேண்டும்
அல்லது
‘ இங்கு மிருகங்கள் வாழ்கின்றன’
என்று இருக்க வேண்டும்.
இந்தியாவில்… ஏன் உலகிலேயே… வேறு எந்த மொழியிலாவது இப்படி படத்தின் பெயரைக் கூட தவறாக இலக்கணப் பிழையோடு வைப்பது தமிழ் சினிமாவில் தொடர்கதையாகி வருகிறது.
படம் எப்படி இருக்கிறது? சசிக்குமார் இயக்கியிருக்கிறார்
கதையின் நாயகனாக நடித்து தயாரித்திருக்கிறார் பைன் ஷான்
இசை வித்யா சரண், ஸ்டண்ட் இடிமின்னல் இளங்கோ. கதாநாயகி இல்லை திரைப்படத்தை நகர்த்தி செல்லும் கதை நாயகியாக ஶ்ரீதேவி உண்ணிகிருஷ்ணன்.
கதை என்ன ….
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடுரம் பற்றிய மற்றொரு திரைப்படம். தாயை இழந்த கதை நாயகிக்கு தாயும், தந்தையுமாக அப்பா இருந்து வருகிறார். அமைதியான குடும்ப சூழலில் காதல் என்கிற பெயரில் கதை நாயகியை தன் வயப்படுத்துகிறான் காமுகன் ஒருவன். பெண்மைக்கு உரிய இரக்கமும், அன்பும் காதலனை நம்பி அவனுடன் தனிமையை நாடி செல்கிறது. சூழலை சாதகமாக்கி பெண்ணின் நம்பிக்கையை ஏமாற்றி அவளது பெண்மையை வலுக்கட்டாயமாக அனுபவிக்கிறான். தன் நண்பர்களுக்கும் விருந்தாக்கி அவளை கொலை செய்கிறான். கொலையாளிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கும் என்கிற எதிர்பார்ப்பு பொய்யாகிறது. மகள் மனபங்கபடுத்த பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க புறப்படுகிறார் தந்தை. பெண்ணின் தந்தையாக வரும்ஃபைன்ஜான், பாசமான தந்தையை கண்முன் நிறுத்துகிறார். மகள் தன் பெயரைச் சொல்லி அழைக்கும்போது வெளிப்படுத்தும் பாசம், மகளுக்காக அனைத்தும் செய்யும் அன்பு, மகள் சீரழிக்கப்பட்டதை அறிந்து கலங்கி கதறுவது, பிறகு வெறி கொள்வது என்று பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். அதிலும் இறுதிக் காட்சி எதிர்பாராத அதிர்ச்சி.
மகளாக வரும் உன்னி கிருஷ்ணனும் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார். தந்தையிடம் காட்டும் பாசம், தன்னை காதலிப்பதாகச் சொல்லி வருபவனை லந்து செய்து அனுப்புவது, நம்பி வந்தவன் மோசம் செய்தவுடன் குமுறுவது என சிறப்பான நடிப்பு.
மற்ற கதாபாத்திரங்களில் தோன்றும் சேரன்ராஜ், லவ்லி ஆனந்த், அஸ்மிதா, கோலிசோடா ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் இயல்பான நடிப்பை அளித்து உள்ளனர்.நாயகியின் இள வயது தோற்றத்தில் வரும் சிறுமியும் முகபாவங்களில் அசத்துகிறார்.
வித்யாஷரன் இசையில் பாடல்கள் ( அதிலும் ஆரிரோ), பின்னணி இசை அற்புதம். திருவாசகத்தையும் பாடல்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். பாடலாசிரியர்கள் எம்.மாணிக்கம், எம்.மதிவாணன் ஆகியோருக்கு பாராட்டுகள்.
சந்திரன் சாமியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். சண்டைக் காட்சிகளில் அனல் அடிக்கின்றது. சண்டை பயிற்சியாளர் ‘இடி மின்னல்’ இளங்கோ அதிரடி காண்பித்து இருக்கிறார்.
கர்த்தரை வணங்கிவிட்டுச் செல்லும் பெண் ஆபத்தில் சிக்குவது போன்று அமைத்திருந்த காட்சி சிறப்பு. என்னதான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், மனிதர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை சிறப்பாக உணர்த்தி இருக்கிறார்கள்.பெண்களை போகப்பொருளாக மட்டும் பார்த்து பலாத்காரம் செய்யும் சில வன்கொடுமை இளைஞர்களுக்கு சரியான பாடம் கொடுத்து இருக்கிறார் எஸ்.சசிகுமார்.
முதல் படத்திலியே வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து தயாரித்ததோடு நடிக்கவும் செய்திருக்கும் பைன்ஜானுக்கும் பாராட்டுகள்.