“இந்த கிரைம் தப்பில்லை” – திரைவிமர்சனம்

“மதுரியா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், மனோஜ் கிருஷ்ணசாமி தயாரிப்பில், தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கல் ராவ், கிரேசி கோபால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “இந்த கிரைம் தப்பில்லை”.

கதைப்படி.‌.. செல் போன் கடையில் வேலை பார்க்கும் மேக்னா, அங்கு வரும் மூன்று இளைஞர்களை காதலிப்பது போல் நடித்து, அவர்களை இவர் பின்னால் சுற்ற வைக்கிறார். அதில் ஒரு இளைஞர் ஜாதி சங்க தலைவரின் மகன், மற்ற இருவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். மற்றொரு புறம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்கு துணை போகும் நபர்களைக் கடத்தி தண்டனை கொடுக்கிறது ஒரு இளைஞர் பட்டாளம். அவர்களின் தலைவராக முன்னாள் ராணுவ வீரர் ஆடுகளம் நரேன் அவர்களை வழிநடத்துகிறார்.மேக்னா வின் காதல் வலையில் சிக்கிய இளைஞர்களின் காதல் நிறைவேறியதா ? பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததா ? சட்டத்திற்கு புறம்பாக தண்டனை வழங்கும் இளைஞர் அணியினரின் செயல்பாடு சரிதானா என்பது மீதிக்கதை…
இந்தப் படத்தில் ஆடுகளம் நரேன் தவிர்த்து மற்ற நடிகர், நடிகைகள் புதுமுகங்கள் என்றாலும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பித்தாலும், அவர்களுக்கு  இளைஞர் அணி தண்டனை வழங்குவது தப்பில்லை என்கிற கருத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கிய இயக்குனர், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.