SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்”.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
இயக்குநர் சாய் பிரபா மீனா பேசியதாவது…
இந்த இடத்தில் நான் நிற்க காரணம் என் ஆசான் ஜெய் ஆகாஷ் அவர்கள் தான், அவருக்கு என் நன்றி. சிறுபட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்பு செல்வன் மிகப்பெரும் ஆதரவைத் தந்தார். தயாரிப்பாளர் ராம்குண்டலா ஆஷா அவர்கள் தான் கதையைநம்பி எனக்கு வாய்ப்பு தந்து தயாரித்தார்கள். ஷகிலா மேடம் படபடவென பட்டாசு போல் நடித்து முடித்தார். மீசை ராஜேந்திரன் சார் நன்றாக நடித்து தந்தார். ஜெய் ஆகாஷ் சார் மூலம் தான் எனக்கு இங்குள்ள அனைவரையும் தெரியும். பெண்களை மையப்படுத்தி, அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி, இந்தப்படத்தை இயக்கியுள்ளேன். சின்ன படம் பெரிய படம் என எதுவும் இல்லை அதை வைத்து மனிதர்களின் திறமையை எடை போடாதீர்கள். உலகமே கிறுக்கன் என சொன்ன எலான் மஸ்க் இன்று உலகையே ஆளுகிறார். எனில் என்னைமாறி இளைஞர்களும் ஜெயிக்க முடியும் என நம்புகிறேன் என்றார்.
Related Posts
தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர். கே. அன்பு செல்வன் பேசியதாவது…
இயக்குநர் முதலில் யோக்கியன் என ஒரு படம் எடுத்தார். அது ரிலீஸாகி ஆறு மாதத்திற்குள் அடுத்த படத்தை எடுத்து டிரெய்லர் விழாவிற்கு கொண்டு வந்துள்ளார் சாய் பிரபா. இப்போதெல்லாம் காசு வாங்கிக் கொண்டு மேடைக்கு வந்து அவர்களுக்கு தோன்றுவதையும், படஹீரோக்களையும் திட்டி பேசிவிட்டுபோகிறார்கள். படம் பற்றி பேச மறுக்கிறார்கள். இது மாற வேண்டும். சினிமாவில் யாரையும் ஏமாற்றக்கூடாது என்றார்.
நடிகர் ஜெய் ஆகாஷ் பேசியதாவது..,
இயக்குநர் சாய் பிரபா என் தம்பி மாதிரி. எனக்காக என்னவேணாலும் செய்வான். அவனுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்று எடுத்த படம் தான் யோக்கியன். இப்போது அவனே அவன் முயற்சியில் இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ் படத்தை இயக்கியுள்ளான். டிரெய்லர் ஷாட்ஸ் எல்லாம் நன்றாக வந்துள்ளது. படத்தில் இருக்கும் அனைவரும் என் நண்பர்கள் தான். படத்தில் எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர்.நான் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளேன். ஆனால் சாய் தான் நன்றி மறக்காமல் இருக்கிறான். இவனிடம் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது அவன் ஜெயிக்க வேண்டும் என்றார்.