வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.வரும் அக்டோபர் 6-ம் தேதி இப்படம் உலகெங்கும் ரிலீஸாக இருக்கிறது. இதையொட்டி இறுகப் பற்று படக் குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது”தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது”
படம் பார்த்துவிட்டு நன்றாக வந்திருக்கு என்கிற சந்தோஷத்தில் இப்போது பேசுகிறேன். என் மனைவிக்கு இந்தப் படத்தை போட்டு காட்டினேன். நீங்கள் பார்த்து விட்டீர்களா என கேட்டபோது ஆம் என்றேன். அப்ப ஏன் இன்னும் திருந்தாமல் இருக்கிறீர்கள் என என்னிடம் கேட்டார். அப்போதே இந்த படத்தின் மீது நம்பிக்கை வந்துவிட்டது. நிச்சயமாக இந்த படம் ஒரு பிரச்சாரமாக இருக்காது.
இந்தப் படத்திற்கு வழக்கமான ஒரு டிரைலர் போல இல்லாமல் புரமோஷனுக்காக கேப் என்கிற ஒரு வீடியோவை வெளியிட்டோம். அது பெரிய அளவில் ரீச்சாகி இருக்கிறது. இரண்டு பேர் பகிர்ந்ததிலேயே 2 கோடி பேர் அதை பார்த்து இருக்கிறார்கள் என்பது சந்தோஷம் தருகிறது..” என்றார்.