இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம்

இயக்குனர் பார்த்திபன்  தனது முதல் படமான ” புதியபாதை ” முதல் கடைசியாக வெளியான ” ஒத்த செருப்பு ” வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனி
பாதையை உருவாக்கி , அதில்  பயணிக்கிறார்.  ஒத்த செருப்பு 2019ம் ஆண்டுக்கான தேசிய விருது உட்பட  பல சர்வதேசவிருதுகளை பெற்றது. தனது முந்தையபடங்களில்
உலக சினிமாவை நோக்கி சென்ற பார்த்திபன் , தற்போது உலக சினிமாவை தன்பக்கம் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்
 உலகின் முதல் NON – LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலை  எடுத்து முடித்து உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தார்.
அதில் மூன்று சர்வதேச விழாக்களில்  இரவின் நிழல் வெற்றிபெற்றுள்ளது. அதில்  ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுக்கு  இரண்டு விருதுகளும் இரவின் நிழல் படத்திற்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது. மேலும் இரண்டு சர்வதேச விருதுகளில் Official Selection பட்டியலில் இடம்பெற்றுள்ளது இதுவரை இரவின் நிழல் திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் கண்ட திரைப் பிரபலங்கள் இதுவரை இப்படி ஒரு திரைப்படத்தை வாழ்நாளில் கண்டதில்லை என நெகிழ்ந்து ஆச்சர்யத்துடன்பாராட்டுகின்றனர் என்கிறது இரவின் நிழல் படக்குழு.
சர்வதேச விருதுகள் கிடைத்ததில் பார்த்திபனுக்கு மகிழ்ச்சி என்றாலும், ஜூலை 15 வெளிவர இருக்கும்
“இரவின் நிழலுக்கு
திரையரங்கிற்கு  ரசிகர்கள் வந்து கைதட்டல் + விசிலுடன் தரப் போகும் பெரு வெற்றியே தனக்கான பெரிய விருது –
 என காத்திருப்பதாக கூறுகிறார்   இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.