இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி விலகல்
இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு அந்த பாடல்கள் இடம்பெற்றுள்ள தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்களுடன்
இந்த மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று இருக்கிறோம். அந்த அடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனால் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எக்கோ நிறுவனமும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வில் 25.03.2024 அன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அறிவித்தார். அதோடு இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.