ஸ்ரீ லட்சுமி திரைக்கலைக்கூடம் சார்பில் ஸ்தபதி டாக்டர் ஆர் . பிரபாகரின் தயாரிப்பில் எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் இயக்குநராக அறிமுகம் ஆகும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடனகும்பகோணம் அருகில் உள்ளதாராசுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தொடங்கியது
பவுடர் திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீஜியிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய கௌஷிக் ராம் கதாநாயகனாகவும், பிரபல யூடியூபர்களான ரவி விஜே மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கும் இப்படத்தில் சிங்கம்புலி , குக் வித் கோமாளி புகழ் சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டி எஸ் ஆர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இத்திரைப்படம் குறித்து அறிமுக இயக்குநர் எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் கூறுகையில்:
“இது ஒரு ரொமான்டிக் காமெடியாக, எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்,” என்றார். கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக நகரத்திற்கு வரும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் முக்கிய கருவாக உள்ளது என்றும், அழுத்தமான சமூக கருத்துக்களை நகைச்சுவையுடன் கூறக்கூடிய படமாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.