என் சுவாசமே திரைப்பட இசை வெளியீட்டு விழா தொகுப்பு

‘என் சுவாசமே’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!!!SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 19.02.2024 காலை சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
சுவாசம் இல்லை என்றால் உயிர் இல்லை, அன்பு இல்லை, உணர்வில்லை, சுவாசம் என்பதே உயிர் வாழ முக்கியம். வாழ்வின் முக்கியம் சுவாசம்.  என் சுவாசமே என அதை டைட்டிலாக வைத்ததற்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக இப்படம் வெற்றிப் பெறும். மலையாளம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்திய அளவில் மலையாளக் கலைஞர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். கதையை விட்டு வெளியில் செல்ல மாட்டார்கள். அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கலைக்கு மொழி கிடையாது. இப்படத்தில் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.இயக்குநர் பேரரசு பேசியதாவது..

என் சுவாசமே டைட்டில் மட்டும் தமிழில் இருக்கிறது மற்றதெல்லாம் மலையாளம் தான். இங்கு யாரும் மொழியைப் பெரிதாக பார்ப்பதில்லை. எல்லோரையும் கொண்டாடுவார்கள். மலையாளத்தில் இருந்து கன்னடத்திலிருந்து, இந்தியிலிருந்து எல்லாம்  படங்கள் இங்கு ரீமேக் ஆகும். இங்கு நாக்கள் அனைவரையும் கொண்டாடுவோம். என் சுவாசமே படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.பாடத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்,  R மணி பிரசாத் கூறியதாவது..

இங்கு எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றிகள். மலையாளப்படங்களை இங்கு கொண்டாடுவது போல தமிழ்படங்களை கேரளத்தில் கொண்டாடுவார்கள். கேரளாவில் தமிழ்படங்களுக்கு பெரிய பிஸினஸ் இருக்கிறது. இந்தப்படத்தில் எனக்கு குறைவான நேரமே இருந்தது. அதனால் தான் மலையாளக் கலைஞர்கள் நிறைய பணியாற்றியுள்ளனர். எனக்காக எல்லோரும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். நன்றி.தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது..

என் சுவாசமே.. மலையாளத்திலிருந்து படமெடுக்கிறவர்கள் நல்ல தமிழ் டைட்டில் வைக்கிறார்கள் ஆனால் தமிழில் ஆங்கில டைட்டில் வைக்கிறார்கள். எங்கு போனது தமிழ்ப்பற்று. இந்தப்படத்தில் 3 பாடல்கள் போட்டுக்காட்டினார்கள். அத்தனை அற்புதமாக இருந்தது. இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருப்பது இன்னும் பலம். மலையாள சினிமாவில் எப்பவும் கதைக்காகத் தான் ஹீரோ. ஹீரோவுக்காக படம் செய்ய மாட்டார்கள் அநாவசிய செலவு செய்ய மாட்டார்கள், இங்கு ஏவிஎம்மில் ஷீட்டிங் வைத்தாலும் கேரவன் கேட்கிறார்கள். மம்முட்டி தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதே இல்லை. அவரே சொந்தமாக கேரவன் வைத்துக்கொண்டுள்ளார். இதையெல்லாம் தமிழ் சினிமா ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவிற்கு கடுமையான சென்சார் கெடுபிடிகள் இருக்கிறது ஆனால் வெப் சீரிஸ்க்கு சென்சார் இல்லை அதில் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்கிறது. மத்திய அரசு வெப் சீரிஸிற்கும் சென்சார் கொண்டு வர  வேண்டும்.  என் சுவாசமே படத்தை சிறப்பான படமாக கொண்டு வந்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.