முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1975 ஆம் ஆண்டு சூன் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துபடத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா என்பவர் எழுதியுள்ளார்.2023 ஆம்ஆண்டுபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல், மற்றும் சில காரணங்களால் படத்தின் வெளியீடு இருமுறை தள்ளிவைக்கப்பட்டது. செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.