நூற்றாண்டு கடந்தஇந்திய சினிமாவில் அதன் வளர்ச்சிக்கு தென் இந்தியாவில் பங்களிப்பு செய்த ஸ்டுடியோக்களில் ஒன்று தமிழகத்தை சேர்ந்த ஏவிஎம் தமிழ் சினிமா, மற்றும் தமிழக அரசியல் வரலாற்றில் ஏவிஎம் ஸ்டுடியோவை தவிர்க்க முடியாது எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறை நடிகர்களான சூர்யா வரை இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் நடிக்காதவர்கள் மிக குறைவு என்கிற பெருமைக்குரிய ஏவிஎம் ஸ்டுடியோ கால மாற்றம் காரணமாகஸ்டுடியோவின் ஒரு பகுதி ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டது. எஞ்சிய இடங்களில் தியேட்டர், டப்பிங் தியேட்டர், எடிட் சூட் செயல்பட்டு வந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு தியேட்டரும் மூடப்பட்டது. அதையடுத்து அந்த இடம் புதுபிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த இடத்தில் திருமணம், படப்பிடிப்பு, பட பூஜை மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் புதுபொலிவுடன் தயாராகி உள்ளது. சுமார் 7200 சதுர அடியில் ரூம், ஹால் போன்றவை தயார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் இப்போது திருமணம் தொடர்பான நிகழ்வுகளும் நடைபெற இருக்கிறது. அதற்கான புக்கிங்கும் செய்து வருகின்றனர். இப்போதைக்கு தமிழகத்தில் படப்பிடிப்பு மற்றும் சினிமா தொடர்பான விழாக்களுக்கு ஒரு சில இடங்களே உள்ளன. தற்போது ஏவிஎம் புதுப்பிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அந்த வளாகம் தமிழ் சினிமா நிகழ்வுகளில் தவிர்க்க முடியாதவளாகமாக இடம்பெறவுள்ளது
Prev Post