Related Posts
இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சொர்கவாசல்’. இயக்குநருடன் இணைந்து, எழுத்தாளர் தமிழ் பிரபா, அஸ்வின் ஆகியோர் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
டீசர் எப்படி?
இந்த டீசரின் சம்பவமே செல்வராகவனின் மிரட்டலான சர்ப்ரைஸ் தான்.வாயில் பிளேடுடன் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றுதொடக்கத்தில்அறிமுகப்படுத் தப்படுகிறது. பின்னணியில் நடிகர் கருணாஸ் குரலில் பைபிள் வாசகங்கள் ஒலிக்க, ஒவ்வொரு கதாபாத்திரமாக தங்களது குணநலன்களை வெளிப்படுத்துகின்றனர். மொத்தக் கதையும் சிறைக்குள்ளேயே நடப்பதாக தெரிகிறது. போதைப்பொருட்கள் புழக்கம், ரத்தம், அடிதடி என காட்சிகள் மிரட்டுகின்றன.
மோசமானவர்கள் அதிகம் இருக்கும் சிறையில் ஆர்.ஜே.பாலாஜி தண்டனை கைதியாக வந்து சேர்கிறார்
எந்தவித ஆர்பாட்டமில்லாத, அதிகம் பேசாத ஆர்.ஜே.பாலாஜியின் முக பாவனைகளை பார்ப்பது முதன்முறை. டீசருக்கு உயிர் கொடுக்கிறது பின்னணி இசை. கச்சிதமாக வெட்டப்பட்டுள்ள டீசரின் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
Prev Post