கமல்ஹாசனின் 237-வது படத்தை இயக்கும் அன்பறிவ் சகோதரர்கள்!

கமல்ஹாசன் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்குவார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கும் ‘கல்கி2898ஏடி’ படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசனின் புதிய படமான ‘237’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களான

அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். மேலும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த மற்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
அன்பறிவ் இரட்டையர்கள் ‘கேஜிஎஃப்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார்கள்.முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள்ன் என்பது குறிப்பிடத்தக்கது.