கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் இந்தியன். இந்த படத்தில் கமல், தந்தை-மகன் என இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம், இந்தியன்-2 ஆறு ஆண்டு காலபோராட்டத்திற்கு பிறகு சூலை 12 அன்று
வெளியாக உள்ள நிலையில்
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. முன்னதாக படத்தின் டிரைலர் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. நிகழ்வில் கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, இசையமைப்பாளார் அனிருத், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகர் கமல்ஹாசன் பேசுகிற போது
இரண்டாம் பாகம் என்ற ஃபேஷன் வருவதற்கு முன்பே நாங்கள் முதல் பாகத்தை எடுத்துவிட்டோம். ‘இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தின் டப்பிங் பணிகளின்போதே நான் ஷங்கரிடம் சொன்னேன். சார் இரண்டாம் பாகத்தை எடுத்துவிடலாம்என்று.
இரண்டாம் பாகம் எடுப்பதற்கான கருவை எங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனென்றால் ஊழல் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் இரண்டாம் வருகைக்கு உங்கள் மத்தியில் அர்த்தம் உருவாகியுள்ளது.
நான் மதிக்கும் நல்ல நடிகர்கள் நெடுமுடி வேணு, மனோபாலா, விவேக் போன்றவர்கள் இன்று நம்முடன் இல்லை. அவர்கள் இந்த விழாவில் பங்கேடுத்திருக்க வேண்டியவர்கள். இப்போது தான் விவேக்கின் காட்சிகளை படமாக்கியதாக தோன்றுகிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு ‘இந்தியன்’ சீரிஸ் ஓர் உதாரணம். இயக்குநர் ஷங்கர் இன்றும் இளைஞராகவே இருக்கிறார்.இந்தப் படம் முடிவடைய ஆறு வருடங்கள் ஆனதற்கு தொழில்நுட்ப கலைஞர்களோ, நடிகர்களோ காரணமில்லை. இயற்கை தான் காரணம். கோவிட், விபத்து என பல விஷயங்கள் இடையூறாக அமைந்தன. இதிலிருந்து எங்களை மீட்டு தோளில் சுமந்து வந்த லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு கடமைபட்டுள்ளோம்.
இந்தப் படத்தில் உதயநிதி இணைந்ததற்கு காரணம், நடிகர் கமல்ஹாசனையும், இயக்குநர் ஷங்கரையும் அவர் பெரிதாக ரசிக்கிறார் என்பதுதான் உண்மை. 100 சதவீத உழைப்பைக் கொடுத்திருக்கிறார் அனிருத். இந்தப் படத்துக்காக உழைத்தவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு உழைத்ததாக தெரியவில்லை. மாறாக அவர்கள் சந்தோஷமாக உழைத்தார்கள்” என்றார். இதையடுத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார். சந

28 வருடத்திற்கு முன் இந்தியன் படம் வந்தது. ஆனால், அப்போது இருந்த அதே ஊழல் இப்போதும்நடந்து கொண்டுதான் இருக்கிறது இதற்கு காரணம் அரசியல்வாதியா என்ற கேள்விட்டு
ஊழலுக்கு முக்கியமான காரணம் நாம் தான். நாம் இல்லாமல் அரசியல்வாதிகள் ஊழலை தனியாக நடத்திவிட முடியாது. இதையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். அதற்காக நான் தனியாக பாராட்டிவிட்டேன், இனி நீங்கள் படம் பார்த்துவிட்டு பாராட்ட வேண்டும் என்றார்.
இந்தியன் 2 ஜூலை 12ந் தேதி வெளியாகிறது. இதன் நான்காம் பாகம், ஐந்தாம் பாகங்கள் வெளியாகி மம்முட்டி நடிப்பில் வெளியான சிபிஐ டைரிக் குறிப்பு படத்தின்சாதனையை முறியடிக்குமா என்ற கேள்விக்கு
இந்த கேள்வியை நீங்கள் கேட்கும்போதே எனக்கு பதறுகிறது, தயவு செய்து அந்த கேள்வியை இப்போது கேட்க வேண்டாம். இந்தியன் முதல் பாகம் எடுக்கும் போது, நான் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று ஷங்கரிடம் கூறினேன். அப்போது அவர் பதறினார். இப்போது நான் பதறுகிறேன். முதலில் இந்த படத்தை பாருங்க, இதற்கு அடுத்து வரும் படத்தையும் வெற்றிப்படமாக்குங்கள். அதன்பிறகு எங்களுக்கு தெம்பு இருந்தால், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அது எல்லாம் நடக்கலாம் என்றார்
இந்தியன் 2வில் சுகன்யா வருவாங்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர்ஷங்கர்
அந்த கதாபாத்திரம் இந்தியன் 2வில் தேவைப்படவில்லை. மேலும், படத்தின் கதை குறித்து பல யூடியூப் சேனல்களில் பலவிதமான தகவல்கள் பரவி வருகிறது. அதை எல்லாம் எனக்கு பார்க்க இப்போது நேரம் இல்லை. இந்தியன் 2 படத்தின் கதை என்ன என்பதை தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று இயக்குநர் ஷங்கர் பதில் அளித்தார்.