கமல்ஹாசன், கார்த்திக்குக்கு மாற்றாக யோகி பாபு ?

கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் 233 ஆவது படத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 4,2023 அன்று வெளியானது.

அதன்பின், அப்படம் குறித்து எந்ததகவலும் வெளியாகவில்லை .
இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. அதற்கான எந்த ஏற்பாடும் நடக்கவில்லை.

அதேசமயம், மணிரத்னம் இயக்கும்கமல்ஹாசனின் 234 ஆவது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கும் என்று சொல்லப்பட்டது. சில நாட்கள் தள்ளிப்போய் விரைவில் தொடங்கவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
மணிரத்னம் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்குவதால்
இனியும் என்னால் காத்திருக்க முடியாது எனஎச்.வினோத் கமல்ஹாசனிடம் நேரடியாகவே கூறியதாக கூறப்படுகிறது.
இருந்த போதிலும் இயக்குநர் வினோத்தை சமாதானப்படுத்தும் முயற்சி கமல்ஹாசன் தரப்பில் மேற்கொள்ளப்பட்டும் பலனளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் கமல்ஹாசன் – வினோத் கூட்டணியில் தயாரிக்க இருந்த
படம் கைவிடப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இதனை கமல்ஹாசன், வினோத் என இரு தரப்பிலும் மறுக்கவில்லை.  கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம்பாகத்தை வினோத் இயக்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில்
2025 ல் தான் அதற்கான தேதி ஒதுக்கீடு செய்ய இயலும் என்கிற அளவிற்கு நடிகர் கார்த்தியின் கால்ஷீட் டைரி இருக்கிறது.
இதனால் வெறுத்துப் போன
எச்.வினோத் வரிசையாகப் பெரிய கதாநாயகர்கள், பிரம்மாண்டமான பட்ஜெட்  படங்கள் என்ற சூழலை தொடராமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்கவேண்டுமென்கிற தன் நீண்ட நாள் ஆசையை நடைமுறைபடுத்த முடிவெடுத்திருக்கிறாராம்  எச்.வினோத்.
சதுரங்கவேட்டை படம் போன்று அரசியல் நையாண்டிப்படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டிருக்கிறாராம்
அந்தக் கதைக்கு காமடி நடிகர் யோகிபாபு பொருத்தமாக இருப்பார் எனயோகிபாபுவிடமும் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அவரும் எச்.வினோத் படமென்றால் மற்ற படங்களுக்கு கொடுத்திருக்கும் தேதிகளில் மாற்றம் செய்து எச்.வினோத் படத்துக்கு முன்னுரிமை கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறாராம்.
காக்க வைத்த கமல்ஹாசன், இப்போதைக்கு தேதி இல்லை என்ற கார்த்தி இருவருக்கும் மாற்றாக காமடி நடிகர் யோகிபாபுவை கதை நாயகனாக்க இயக்குநர் வினோத் முடிவு செய்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.