கமல்ஹாசன் கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். தற்போது சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் நடந்து வந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.மேலும், தக் லைப், கல்கி 2898 கி.பி போன்ற படங்களிலும் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்தியன் 2, தக் லைப், கல்கி 2898 கி.பி படம் குறித்த தகவல் ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, இந்தியன் 2′ மற்றும் ‘இந்தியன் 3′ ஆகிய படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .’இந்தியன் 2’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை முடித்த பிறகு ‘இந்தியன் 3’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகளை தொடங்குவோம்.
மேலும், மக்களவை தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் முடிந்தவுடன் மணிரத்னத்தின் ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். மேலும், ‘கல்கி 2898 கி.பி.’ படத்தில் நான் கவுரவ வேடத்தில் நடிக்கிறேன். என கூறியுள்ளார்.