தமிழ் சினிமாவில் 2022 ஜனவரி முதல் சூலை 30 வரை 80 நேரடி தமிழ் படங்கள் திரையரங்கு, மற்றும் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது இவற்றில் விஜய் நடித்த பீஸ்ட், அஜீத்குமார் நடித்த வலிமை இரண்டு படங்களும் வசூல் ரீதியாக சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது பொய்யாகி போனது சிவகார்த்திகேயன் நடிப்பில்அடுத்து வந்த டான் வணிகரீதியாக வெற்றிபெற்று அவரது திரையுலக பயணத்தில் 100 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த படமானது இதற்கிடையில் மொழி மாற்று படங்களான ஆர் ஆர்ஆர்,கேஜிஎஃப் படங்கள் தமிழகத்தில் அதிகதிரையரங்குகளில் திரையிடப்பட்டு தமிழ்ப்படங்களை காட்டிலும் அதிகமான வசூலை குவித்தன தமிழ் படங்கள் வசூல் சாதனை நிகழ்த்தாதா என்கிற கேள்வி வலிமையடைந்து வந்த நிலையில் சூன் 3 அன்று கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் இதுவரை தமிழ் சினிமாவில் வணிகரீதியாக நிகழ்த்தப்பட்ட அனைத்து சாதனைகளயும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்தது முதல் வாரத்தில் 100 கோடி வசூலை கடந்த இப்படம் நான்காவது வாரத்தில் 400 கோடி மொத்த வசூல் செய்திருக்கிறது தமிழகத்தில் விக்ரம் திரையிடப்பட்ட நகரம், சிறுநகரம், என அனைத்து இடங்களிலும் இதுவரை திரையிடப்பட்ட தமிழ் படங்களின் வசூலை விக்ரம் வசூல் முறியடித்திருக்கிறது இதனை ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும், கமல்ஹாசன் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் திரையரங்குகளில் ஒரு மாதம் கழித்தும் ரசிகர்கள் கூட்டத்துடன் விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தை பார்த்துள்ளார் இதனை தொடர்ந்து விக்ரம் படத்தில் நடித்த நடிகர் கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன். விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்கள் கலை பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இது வாழ்த்துபோல் இருந்தாலும் அரசியல் ரீதியாக கமல்ஹாசனை வானதி சீனிவாசன் வஞ்ச புகழ்ச்சியாக சீண்டியுள்ளார் என அவரது பதிவுக்கு கீழே தங்கள் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அக்கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இதில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனும் கோவை தெற்கு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜவின் வேட்பாளர்வானதி சீனிவாசனிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது