நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898 ஏடி’. அறிவியல் புனைகதை படமான இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி என பலர் நடிக்கின்றனர். சந்தோஷ்நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஜூன் 27-ல் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படக்குழு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,பைரவாவின் (பிரபாஸ்) சிறந்த நண்பர் புஜ்ஜியை வரும் 22-ம் தேதி அறிமுகப்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தின் 5-வது சூப்பர் ஸ்டாரான புஜ்ஜி,சிறிய வகை பேசும் ரோபோ. இந்த ரோபோவுக்கு கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார். அவர் குரல் ரோபோவுக்கு சிறப்பாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.