காதலின் வலியை உணர்த்தும் ஹாஃப் ஆல்பம்

 

ES Production & Macha Swag Dance  தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ்  இசையில், எழில்வாணன் வடிவமைத்துஉருவாக்கியிருக்கும் 
ஆல்பம் பாடல்,
”ஹாஃப் பாட்டில்”. இன்றைய இளைஞர்களின் காதலையும் ஊடலையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா &  ரேணுகா(சிறப்பு தோற்றம் ) இணைந்து நடித்துள்ளனர். மான்சி  & EV இணைந்து நடன இயக்கம் செய்துள்ளனர். இணையத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலின் குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களசந்தித்தனர்
இயக்குநர், நடிகர், எழில்வாணன் EV பேசியதாவது….
இந்த பாடலை விளம்பரப்படுத்தும் பொருட்டு  பிரபலங்கள் யாரையாவது அழைக்கச் சொன்னார்கள் எனக்கு பேர் தெரிந்த பிரபலம் நீங்கள் தான் அதனால் தான், உங்களை அழைத்து உங்கள் முன்னிலையில் பாடலை விளம்பரப்படுத்துகிறோம்.
நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறேன், இந்த துறை மீதான காதலில் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன், யார் வேண்டுமானாலும் எந்த துறையில் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பினால் சாதிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தான் இதைச் செய்கிறேன்.
 இந்த பாடலின் கரு காதல் தான், காதலர்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும்போது  மனம் விட்டுப் பேசினால் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துவிடலாம். அதைத்தான் ஒரு கருவாக வைத்து இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம் என்றார்.