கா வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள திரைப்படம் ‘கா’. இந்த படத்தில் ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக  நடித்துள்ளார்.

இந்த படத்தில் சலீம் கவுஸ், மாரிமுத்து, கமலேஷ், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர் சி. பாபு இசையமைத்துள்ளார்.
ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரித்த’கா’ திரைப்படத்தின் டிரைலரை2022 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி
நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். 2022ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அப்போது அறிவிக்கப்பட்ட படம் நீண்ட காலமாக முடங்கி இருந்தது. தற்போது கா திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு நேற்று அறிவித்துள்ளது.
 அதன்படி, ‘கா’ திரைப்படம் வருகிற மார்ச் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.