பிரபல கன்னட நடிகையும், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ‘குட்டி ராதிகா’ என அழைக்கப்படும் ராதிகா குமாரசாமி, கன்னட சினிமாவில் சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம் என பெயரெடுத்த ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி புரொடக்சன் தயாரிக்கும் ‘அஜாக்ரதா’ என்கிற புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஆக்சன் த்ரில்லராக உருவாக உள்ள இந்தப் படத்தில் ஸ்ரேயாஸ் தல்பேட் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சுனில், ராவ் ரமேஷ், ஆதித்யா மேனன், தேவராஜ், வினய் பிரசாத், ஷ்ரவன் மற்றும் பல தென்னிந்திய நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.‘தி ஷேடோஸ் பிஹைன்ட் தி கர்மா’ என்பதுதான் இந்தப் படத்தின் டேக்லைன்.