குற்றப்பரம்பரை

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பரபரப்பாகப் பேசப்பட்ட கதை குற்றப்பரம்பரை. இக்கதையை தமிழ் சினிமாவின் மூத்தஇயக்குநர் பாரதிராஜா, சமகால இயக்குநர்பாலா ஆகியோர் படமாக்கப் போவதாகச் சொன்னார்கள்.

எழுத்தாளரும், நடிகருமான

வேலராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை மையமாக வைத்து பாலாவும், வசனகர்த்தா ரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாக கூறப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இதனால் பரபரப்பும் வாக்குவாதத்தை ஏற்படுத்தும் வகையிலான அறிக்கைகள்,
சர்ச்சை பாலாவுக்கும், இயக்குநர் பாரதிராஜாவுக்கும்ஏற்பட்டது.
குற்றப் பரம்பரை, சட்டத்தை எதிர்த்து நிராயுதபாணிகளாகப் போராடிய தென்மாவட்டமக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த தியாகிகளின் போராட்டம் தொடர்பாக பேராசிரியர்
ரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை மையமாகக் கொண்டு திரைக்கதை, வசனம் எழுதப்பட்டுஇயக்குநர் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டமாகவும் இயக்க இருப்பதாக அறிவித்தார்கள்.
அதற்காக, மதுரை மாவட்டம்உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற ஊரில்  இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
ஆனால் அதோடு அப்படம் சம்பந்தமான வேலைகள்அப்படியே நின்று போனது.இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பரம்பரை கதையை ஓடிடிக்கு வலைத் தொடராக   ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிப்பில்இயக்குபவர் சசிகுமார் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. சசிகுமார் இயக்கவிருக்கிறார் என்பதால் இது கவனம் பெற்றது. தொடக்கத்தில் பாரதிராஜா வசமிருந்த குற்றப்பரம்பரை பெயர் சசிகுமாருக்குக் கிடைக்கவில்லை என்றார்கள். அதன்பின் சமரசம் ஏற்பட்டு அந்தப் பெயர் சசிகுமாருக்குக் கிடைத்தது.
இத்தொடரில் சத்யராஜ்,தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் உள்ளிட்டவர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்
இத்தொடரின் படப்பிடிப்பு அக்டோபரிலிருந்து  தொடங்கும் என்று சொன்னார்கள்.அதன்பின் நவம்பரில் படப்பிடிப்பு என்றார்கள். ஆனால் நடக்கவில்லை. டெஸ்ட் ஷூட் எனப்படும் சோதனை படப்பிடிப்பு மட்டும் நடந்திருக்கிறது ஏன் படப்பிடிப்பு தொடரவில்லை என்கிற கேள்விகளோடு அத்தொடர் தயாரிப்பு சம்பந்தமானவர்களிடம் பேசியபோது

பாரதிராஜா குற்றப்பரம்பரை பெயரை விட்டுக்கொடுத்து சசிகுமார் தொடராக இயக்க ஒப்புக்கொண்டாலும் அவருக்குப் பின்புலமாக இருந்து குற்றப்பரம்பரை பற்றிய ஆய்வுகளைச் செய்த ரத்தினகுமார், இந்தப் பெயரில் தொடர் எடுக்க ஒப்புக்கொள்ளவில்லையாம்.

இருந்தபோதும், அவரைக் கண்டுகொள்ளாமல் வேலைகளைத் தொடங்கிவிட்டனராம்.இதனால் கோபமடைந்த ரத்தினகுமார் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டாராம்.தகவலறிந்த சசிகுமார், அவரைச் சமாதானம் செய்து ஒப்புக்கொள்ளவைத்து அதன்பின் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம்.
2024 பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பைத் தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறாராம். அதற்குள் நீதிமன்றம் போகாமலே சுமுகமாகப் பேசிமுடிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள்.