கதை நாயகனாக சூரி நடிக்க, கெளரவ முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘விடுதலை’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.
இது போன்ற தனியார் அரங்குகளில் சினிமா நிகழ்ச்சிகள், விழாக்கள் நடைபெறும்போது மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50% அனுமதி சீட்டுக்களை படத்தில் நடித்துள்ள கதாநாயகர்கள் வாங்கிகொள்வார்கள்.
இதனால் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு விழாவிற்கான அனுமதி டிக்கட்டுகளை வழங்க முடியாமல் புலம்புவார்கள்.
விழாவிற்கான அனுமதி பாஸ் வாங்கிய கதாநாயகர்கள் தங்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆட்களை திரட்டி அரங்கத்தை நிரப்ப கூறுவார்கள். இதற்கு சில நடிகர்கள் பணம் கொடுப்பார்கள் சில நடிகர்கள் பாஸ் கொடுப்பதே பெரிய விஷயம் என பணம் கொடுப்பதை தவிர்த்துவிடுவார்கள்
சூரிக்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர்மன்ற கட்டமைப்பு இல்லை என்பதால் விடுதலை டிரைலர் நிகழ்ச்சிக்கு தனது சொந்த ஊரில் இருந்து அங்காளி, பங்காளி, ஊர்க்காரர்கள் என தனது சொந்த செலவில் பஸ் அமர்த்தி அழைத்து வந்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ரசிகர் மன்ற பேனர்களுடன் விழா அரங்கில் அமர்ந்து கொண்டு ‘சூரி’ என்ற பெயரை உச்சரித்தாலே கை தட்டுவது, சூரி வாழ்க என கோஷமிட்டு கொண்டிருந்தனர்.
விழா தொடங்குவதற்கு முன்னதாக இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை இசைக்குழுவினர் பாடிக் கொண்டிருந்தனர். அதைக் கூடக் கேட்கவிடாமல் அவ்வப்போது கோஷம்போட்டவண்ணம் இருந்தனர்.
கட்டமைக்கப்பட்ட ரசிகர் மன்றங்களாக இருந்தால் அவர்களுக்கு நிர்வாகிகள் எப்போது கை தட்டவேண்டும், கோஷம் போட வேண்டும் என்று முன்னரே வகுப்பு எடுத்துவிடுவார்கள் சூரிக்கு அப்படி ஒரு கட்டமைப்பு, நிர்வாகிகள் இல்லை
அதனால்இளையராஜா விழா அரங்கிற்குவந்த பிறகு நேரடியாக மேடை ஏறி இசையை வெளியிட்டார். அவர் பேசும் போதும் சூரி அழைத்து வந்தவர்கள் கோசமிடுவதும், கைதட்டுவதுமாக இருந்தனர்இதனால் டென்சனானஇளையராஜா இப்படியே கத்திக் கொண்டிருந்தால் மைக்கைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன் என்றார்.
அதன்பிறகே அவர்கள் கோஷமிடுவதை நிறுத்தினார்கள்.அதன் பிறகு மேடையில் படக்குழுவினர் அமர்ந்து படத்தைப் பற்றிப் பேசினார்கள். யார் மேடையில் பேசினாலும் ‘சூரி’ என்று சொன்னால் கோஷம் போட சொல்லி அழைத்து வந்திருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களது சத்தம் ஒரு கட்டத்தில் வரம்பு மீறி ஒலிக்க சூரியே எழுந்து நின்று கையெடுத்துக் கும்பிட்டு நிறுத்தச் சொன்னார்.
இப்படித்தான் எல்லா நடிகர்களும் அவர்கள் நடித்த பட விழாக்கள் நடக்கும் போதெல்லாம் இப்படி ஆட்களை வரவழைத்து ஆரவாரம் செய்யச் சொல்வார்கள். அவர்களது வழியில் இப்போது சூரியும் சேர்ந்துவிட்டார்
கதையின் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் பாக்கியம். அதை இப்படியெல்லாம் செய்து கெடுத்துக் கொள்ளபோகிறாரா அல்லது தவிர்க்கப்போகிறாரா என்பதே தமிழ் சினிமா வட்டாரத்தில் விவாதிக்கப்படும் சம்பவமாக இருக்கிறது.
Sign in