தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் திகில் கதையாக ‘யூ ஆர்நெக்ஸ்ட்’ என்ற படம் உருவாகிறது. இதை ஐமேக்ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம்என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் மொஹிதீன்அப்துல் காதர் மற்றும் மணி தயாரிக்கின்றனர். தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகும் இதில், கே.எஸ்.ரவிகுமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி மற்றும் பலர்நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ஷரீஃப் இயக்குகிறார். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.வசந்த் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் தொடக்க விழாவில் பேசிய கே.எஸ்.ரவிகுமார், “இது வித்தியாசமான ஹாரர் கதை. என்கதாபாத்திரம் பிடித்திருந்தது. இது இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது. அனைவரும் ரசிக்கும்படியான திரைக்கதையை இயக்குநர் ஷரீஃப் அமைத்துள்ளார்” என்றார்.