கொஞ்ச நாள் பொறு தலைவா தேவாவின் இசைக்கச்சேரி

கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி,  தேவாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் பல ப்ளாக்பஸ்டர் இசை ஆல்பங்களை வழங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்
 இசையமைப்பாளர் தேவா.
கானா பாடல் என்றாலே தேவா எனும் பெயர் மட்டுமே நினைவுக்கு வரும், அந்தளவிற்கு தமிழ் சினிமா இசையில் எளியோர்களின் இசையை கேட்கச் செய்த ஆளுமையாளர். மெல்லிசையிலும் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்து, இன்னிசைத்தென்றல் எனப் பெயரெடுத்தவர்.
பல கோடி ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியை தமிழகமெங்கும் துவங்கியிருக்கிறார் தேனிசைத் தென்றல் தேவா. சென்னை, பாண்டிச்சேரியில் வெற்றிகரகமாக இசை நிகழ்ச்சியை முடித்த நிலையில், அடுத்ததாக கோயம்புத்தூரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து  இந்த இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன.
இந்த இசை நிகழ்ச்சியில் திரை இசை பிரபலங்கள் சபேஷ் முரளி, அனுராதா ஶ்ரீராம், SPB சரண், உண்ணி மேனன்,
மற்றுன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் உட்பட பல பிரபல இசை கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தேனிசைத் தென்றல் தேவாவின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த இசை நிகழ்ச்சி, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இன்றும் சமூக வலைதளங்களான யூடுயூப், இன்ஸ்டா, ஸ்பாட்டிஃபை என அனைத்து தளங்களில் அவரது பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சி இப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்ச்சி குறித்தான விவரங்கள், பிப்ரவரி மாத இறுதியில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.