கோப்ரா தென்னிந்திய திரையுலகில் திரும்புகிற பக்கமெல்லாம் பேசக்கூடிய, எப்படி இருக்கும் என கேட்க கூடிய படமாக மாறியிருக்கிறது சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்ககூடிய படம் மாறிவரும் சினிமா வியாபார முறைகளில் படத்தின் மொத்த முதலீடு, அதற்குரிய லாப தொகையுடன் படத்தை நேரடியாகஓடிடியில் வெளியிடும் உரிமையை கேட்ட போது நேரடியாக திரையரங்கில் மட்டுமே “மாஸ்டர்” காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களைபடத்தை வெளியிடுவேன் என்பதில் உறுதியாக இருந்தவர் செவன் ஸ்கீரீன்ஸ் லலித்குமார் படம் தொடங்கி மூன்று வருடங்கள் முதலீடு முடக்கம், அதற்கான வட்டி என எதைப் பற்றியும் கவலைப்படாமல் பொறுமை காத்து நாளை முதல் உலகம் முழுவதும் கோப்ரா படத்தை வெளியிடுகிறார் தங்களது வேலைகள் முடிந்தவுடன் அடுத்த படத்தில் நடிக்க போய் விடுவார்கள் கலைஞர்கள் பட வெளியீடு, அது சம்பந்தமான புரமோஷன் பணிகளில் பங்குகொள்வது அரிதாகி வருகிறது தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் அதற்கும் அதிகமான முதலீட்டில் தயாரிக்கப்படும்படங்களுக்கு முதலீட்டை போன்றே புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை நடைமுறைபடுத்தினார் விக்ரம் படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார் கமல் நடிப்பில் நான்காண்டுகள் கடந்து திரையரங்கில் நேரடியாக வெளியான விக்ரம் வசூலில் சாதனை படைத்ததுதற்போது விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும்” கோப்ரா” படத்தை கமல்ஹாசன் புரமோஷனுக்காக மேற்கொண்ட முயற்சிகளை தென்னிந்தியா முழுவதும் விரிவான முறையில் திட்டமிட்டு நடிகர் விக்ரம் தலைமையில் படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சிகளை திருவிழா கொண்டாட்டங்களாக நடத்தி முடித்துள்ளார் தயாரிப்பாளர் லலித்குமார். திருச்சியில் தொடங்கி, மதுரை, கோவை, சென்னை, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரள மாநிலங்களில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றவிக்ரம் தலைமையிலான படக்குழு நேற்று சென்னை திரும்பியிருக்கின்றதுகடந்த ஒரு வார காலமாக தான் கலந்துகொண்டபுரமோஷன் நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல், கேள்வி பதில் வடிவமாக மாற்றினார் நடிகர் விக்ரம் படத்தின் கதை என்ன என்பதை முழுமையாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் விக்ரம் வெளிப்படையாக கூறவில்லை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் படம் பற்றிய ஒரு தகவலை கூறி வந்த நடிகர் விக்ரம்தான் கலந்துகொண்ட இறுதி நிகழ்ச்சியில் படம் பற்றிய முழுமையான தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்
‘கோப்ரா’ படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ஹைதராபாத்தில் பட குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
‘கோப்ரா’ திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லராகவும், எமோஷனல் டிராமாவாகவும், சயின்ஸ் ஃபிக்சனாகவும், ஆக்சன் என்டர்டெய்னராகவும் கலந்து உருவாகி இருக்கிறது.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
‘கோப்ரா’ என்பதுராஜ நாகம் அது எப்போது தாக்கும் என்று யாருக்கும் தெரியாது.
ராஜநாகத்தின் சுபாவம் அப்படி. ‘கோப்ரா’ ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் தோலை உரித்து கொண்டு புது வடிவத்தை பெறும்.
அதேபோல் இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இயக்குநர் அஜய் ஞானமுத்து பயங்கர புத்திசாலி. படத்தின் இரண்டாம் பகுதியில்தான் என்னுடைய கதாபாத்திரத்தின் வீரியத்தை ரசிகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார்.
உச்சகட்ட காட்சிவரையிலும் கதை சுவாரசியமாக பயணிக்கும்.படத்தில் இடம் பெறும் ஒவ்வொரு கெட்டப்பிற்கு ஏற்ற வகையில் உடல் மொழியையும், பின்னணி பேசும் பாணியையும் மாற்றியிருக்கிறேன்.
ஆறு குரல்களில் மாற்றி மாற்றி பேசி இருக்கிறேன்.இந்தக் ‘கோப்ரா’ திரைப்படத்தில் கணித ஆசிரியர் வேடத்தில் நடித்திருக்கிறேன்
இந்தப் படத்தில் நடித்திருக்கும் கணித ஆசிரியர் வெட்க சுபாவம் உள்ளவராக இருந்தாலும், அசாத்தியமான திறமைசாலி.
கணித ஆசிரியருக்கு ஹாலுஸிநேஸன் என்ற பாதிப்பு இருக்கும்.
ரஷ்யாவில் நடைபெற்ற படப்பிடிப்பு கொரோனா காலகட்டத்தில் முழுமையான பாதுகாப்புடன் நடைபெற்றாலும், அங்கு ஐந்து வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்க வேண்டியதிருந்தது. அதற்கான ஒப்பனை, குளிர்.. இதனை கடந்துதான் நடித்தேன். எனக்கு இவை அனைத்தும் எளிதாக இருந்தது.
ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஒவ்வொரு உடல் மொழி.. அது எனக்கு சவாலானதாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் பணியாற்ற முடிந்தது.
இந்தப் படத்தில் எனக்கும் நடிகை ஸ்ரீநிதிக்குமிடையே அற்புதமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகள் இருந்தாலும் அவர் அதிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.
மீனாட்சி இந்த படத்தில் ஒரு கல்லூரி பெண்ணாகவும், கணித புதிர்களை விடுவிப்பதில் உதவி செய்பவராகவும் நடித்திருக்கிறார்
மீனாட்சியும் அவருடைய கதாபாத்திரமும் மிகவும் சுவாரசியமானது.
மிருணாளினி ரவி என்னை காதலிக்கும் கதாபாத்திரம். உணர்வு பூர்வமான இந்த வேடத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின்போது நடிகை மியா ஜார்ஜ் சிங்கிளாக இருந்தார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பின்போது அவருக்கு திருமணம் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பின்போது அவருக்கு குழந்தை பிறந்தது. தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்விற்காக கொச்சிக்கு சென்றபோது, அவருக்கு ஐந்து மாத குழந்தை இருந்தது. ஆனால் திரையில் மியா ஜார்ஜ் தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடித்திருக்கிறார்.
கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன்முதலாக நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும்போது உங்களை ஆச்சரியப்பட வைப்பார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பங்களிப்பு அதிகம். நாங்கள் எங்களுடைய சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறோம்.இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. கதை, காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சி, சென்டிமென்ட்… என அனைத்தும் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்களை பார்த்த பிரமிப்பு ஏற்படும்.
தற்போது இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களின் தேவை ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்தும் இந்தக் ‘கோப்ரா’ படத்திலும் இருக்கிறது.
‘கோப்ரா’ போன்ற பிரம்மாண்டமான படைப்பை தெலுங்கு ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்றால், அதற்கு திருப்பதி பிரசாத் ஸார்தான் பொருத்தமானவர் என அவரைத் தேர்ந்தெடுத்தோம். அவரும் மனமுவந்து எங்களது வேண்டுகோளை ஏற்று ‘கோப்ரா’ படத்தை தெலுங்கில் வழங்குகிறார்.
எனக்கும், தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது. சிறந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் என்றைக்கும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தக் ‘கோப்ரா’ படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது…” என்றார்.
Sign in