கோமாளி 50 நாட்களில் 44 கோடி வசூல்

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில்
ஜெயம் ரவி நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் கோமாளி.

இந்தாண்டில் வெளியான படங்களில் பேட்டை, விசுவாசம் போன்ற குறிப்பிட்ட சில திரைப்படங்கள் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடியிருக்கிறது அந்த வரிசையில் கோமாளி படம்சேர்ந்திருக்கிறது .

ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வெளியான தனி ஒருவன் திரைப்படத்திற்குப் பின் குழந்தை முதல் பெரியவர் வரை விரும்பி பார்க்கும் படமாக கோமாளி இருந்தது என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

ஜெயம் ரவி. காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தாஹெக்டே,யோகிபாபு, சாரா, கே எஸ் ரவிக்குமார் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் 50 நாட்கள் நிறைவு செய்ததை முன்னிட்டு நேற்று மாலை சென்னையில் படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் .

இதில் கலந்துகொண்டதயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எங்களது நிறுவனம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான திரைப்படங்களை மட்டுமே தயாரிக்கும் என்றார்

மேலும் ஜெயம் ரவி பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் மீண்டுமொரு திரைப்படத்தை தயாரிக்கப் போவதாக கூறினார்

கோமாளி திரைப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி சக்திவேல் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நான் வெளியிட்ட இரண்டாவது திரைப்படம் கோமாளி

முதல் படம் எல்கேஜி அது அரசியல் கலந்த நையாண்டி படமாக இருந்தது குடும்பங்கள் வராமல் ஒரு குறிப்பிட்ட தரப்பு பார்வையாளர்கள் மட்டுமே எல்கேஜி படம் பார்க்க வந்தனர்

 கோமாளி படம் அவ்வாறு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் குடும்பமாக திரையரங்குகளுக்கு வந்ததால் 50 நாட்களை கடந்து தற்போது 50 திரையரங்குகளில் 100 காட்சிகள் வரை கோமாளி ஓடிக்கொண்டிருக்கிறது இப்படத்தை பொருத்தவரை தயாரிப்பாளர் விநியோகஸ்தர் திரையரங்கு உரிமையாளர் பார்வையாளர் என அனைவருக்கும் மனநிறைவையும் முதலீடு செய்தவர்களுக்கு போதுமான லாபத்தையும் கொடுத்த படம் கோமாளி என்றார்

கோமாளி திரைப்படம் தயாரிப்பு தரப்பினர் கூறுவது போன்று வெற்றிப்படமா என்று திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் விசாரித்தபோது இந்த வருடம் வெளியான படங்களில் விசுவாசம் படத்தை தொடர்ந்து குடும்பங்கள் கூட்டமாக வந்து பார்த்த படம் கோமாளி என்கின்றனர்.

50 நாட்களில் கோமாளி திரைப்படம் தமிழகத்தில் சுமார் 44 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது இதன் மூலம் 50 நாட்களில் தமிழகத்தில் மட்டும் திரையரங்குகளில் கோமாளி படத்தை ஐம்பது லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்

வழக்கமாக முன்னணி நடிகர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு அதிகபட்சம் ஆயிரம் முதல் குறைந்தபட்சம் 300 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையை முதல் மூன்று நாட்களுக்கு  செய்வது தமிழகத்தில் வாடிக்கையான ஒன்று

கோமாளி திரைப்படத்திற்கு தொடக்கம் முதல் இன்றுவரை அரசு நிர்ணயித்த 60 ரூபாய் முதல் பெருநகரங்களில் 175 ரூபாய் வரை மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.