சரோஜினி நாயுடுவாக சாந்திப்ரியா

நடிகர் ராமராஜன் நடிப்பில் 1987ல் வெளியான படம்எங்க ஊரு பாட்டுக்காரன் இந்ததிரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில்  கதாநாயகனாக ராமராஜனும் கதாநாயகியாக பானுப்ரியாவின் சகோதரி நிஷாந்தி என்னும் சாந்தி பிரியா நடித்திருப்பார் இதைத்தொடர்ந்து

தமிழ் தெலுங்கு இந்தி என பழமொழி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்1994 ஆம் ஆண்டு இவர் ஒரு இந்தி திரைப்படத்தில் நடித்துவிட்டு அதற்குப் பிறகு நடிக்காமல் இருந்து வந்தார் 

இந்த நிலையில் மீண்டும் தற்போது இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதனை உறுதிப்படுத்தும் வகையில்இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘இந்த நாட்டை தட்டி எழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதுமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.