சர்தார் பட பாக்கியை தராத ஆஹா ஓடிடி தளம் நீதிமன்றம் போகும் சர்தார் தயாரிப்பாளர்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான படம் சர்தார்.இயக்குநர் பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டைவேடங்களில் நடித்திருந்தார்.ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர்.இந்தப்படத்தின் இணையதள ஒளிபரப்பு உரிமையை ஆஹா நிறுவனம் 22 கோடி ரூபாய்க்கு பெற்றிருந்தது. ஓடி டி உரிமைக்கான தொகையை படம் வெளியாவது உறுதியானவுடன் கொடுப்பதை சர்வதேச அளவிலான ஓடிடி நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றனநடிகர் அல்லு அர்ச்சுனுக்கு சொந்தமான ஆஹா நிறுவனம்மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் எங்களால் கொடுக்க முடியாது தவணை முறையில் தருகிறோம் என கூறியதை தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டிருக்கிறார்

குறுகிய நாட்களில், அல்லது வாரங்களில் கொடுத்துவிடுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்த தயாரிப்பாளருக்கு ஏமாற்றமே எஞ்சியது படம் வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பணத்தை முழுமையாகக் கொடுக்கவில்லை.
ஏழுகோடி ரூபாய் பணத்தை கொடுக்காமல் பாக்கிவைத்துள்ள ஆஹா நிறுவனத்திடம்ஒன்றுக்குப் பலமுறை கேட்டும்ஆஹா நிறுவனம் மெளனம் காத்து வருகிறதாம்
ஒப்பந்தம் கையிலிருப்பதால் அதை வைத்து நீதிமன்றத்துக்குப் போகலாம் என்று பலர் சொன்ன யோசனையை செல்படுத்தவிருக்கிறார் தயாரிப்பாளர்என்று சொல்கிறார்கள்.திரைப்படத்துறைக்குள்ளேயே இருக்கும் ஆஹா நிறுவனத்தினர் இப்படி நடந்துகொள்ளும் விசயமறிந்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.