திரைப்படம் தயாரிப்பதைகாட்டிலும் அதனை சரியாக திட்டமிட்டு மார்கெட்டிங், புரமோஷன் செய்தால் மட்டுமே நல்ல படங்கள் கூட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வெற்றிபெற முடியும் என்பதற்கு போர் தொழில் மிகச்சிறந்த உதாரணமாகும்.
ஜனவரி முதல் மே மாதம் இறுதிவரை 90 நேரடி தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் 10% படங்களே முதலுக்கு மோசம் செய்யாமல் திரையரங்குகளில் கல்லா கட்டியுள்ளது. இவற்றில் அறிமுக இயக்குநர்கள் இயக்கிய படங்கள், குறைந்தபட்ஜெட்டில் தயாரான டாடா, குட்நைட் போன்ற படங்கள்தான் அதிகமாக வெற்றி பெற்றிருக்கின்றன.
அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படம் சூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை சூன் 7 ஆம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களுக்குதிரையிட்டனர்இதனால் படம் பற்றிய விமர்சனங்கள், கருத்துகள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே சமூக வலைதளங்களில் குவிய தொடங்கியது. போர் தொழில் வெளியான அன்று சித்தார்த் நடிப்பில் டக்கர், மற்றும் பெல், சமுத்திரகனி நடிப்பில் தயாரான விமானம் என நான்கு படங்களும் திரையரங்குகளை ஆக்கிரமித்திருந்தன. இருந்தபோதிலும் டக்கர் – போர்தொழில் என இரண்டு படங்களுக்கு மட்டுமே போட்டி இருந்தது. 9 ஆம் தேதி காலைக்காட்சியில் டக்கர் அதிக வசூலையும் போர் தொழில் மோசமான வசூலையும் எதிர்கொண்டது. பிற்பகல் காட்சியில் போர் தொழில் முதலிடத்துக்கு வந்ததுடன் பிற படங்களை கிட்ட நெருங்கவிடாத உயரத்தை எட்டிப் பிடித்தது. காலை காட்சியில் வெறும் 20,000 ம் ரூபாய் வசூல் செய்த போர் தொழில் பிற்பகல் காட்சியில் 60,000 ம் ரூபாய் என உச்சம் தொட்டது என்கிறார் போர் தொழில் படத்தை தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் வெளியிட்டிருக்கும் விநியோகஸ்தரும், திரையரங்க குத்தகைதாரருமான ராமதாஸ் முதல் நாளில் சுமார் 1 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த போர் தொழில் சனி, ஞாயிற்றுகிழமைகளில் சுமார் 5 கோடி ரூபாய் வசூலை எட்டிப் பிடித்து இருக்கிறதுஇதனால், போர் தொழில் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Sign in