கதையின் மையப்புள்ளியாக இருக்கும் இணையர் லியோசிவக்குமார் மற்றும் நக்ஷாசரண் ஆகியோர் பொறுப்புணர்ந்து நடித்து நம்மைக் கலங்க வைத்திருக்கிறார்கள்.
ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் ராமராஜனின் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள்.படத்துக்
வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் மைம் கோபி,
செய்தியாளராக நடித்திருக்கும் அபர்ணதி,ஸ்முமதி வெங்கட், வினோதினி காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் கஜராஜ்
உள்ளிட்டோர் திரைக்கதையோட்டத்தை வேகப்படுத்தப் பயன்பட்டிருக்கிறார்கள்.
ராமராஜன் – இளையராஜா கூட்டணி கோலோச்சிய காலம் இன்னும் பசுமையாக இருக்கிறது.இப்படத்தில் மீண்டும் அந்தப் பாடல்களைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
ஒளிப்பதிவாளர் அருள்செல்வன், படத்தொகுப்பாளர் ராம்கோபி ஆகியோர் இன்னும் கொஞ்சம் கூடுதல் உழைப்பைக் கொடுத்திருக்கவேண்டும்.
இயக்குநர் ராகேஷ், வங்கிக் கடன் வாங்கி வீடு வாங்கிய ஒவ்வொருவரும் பாராட்டும் கதைக் களம் ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு அதைத் திரைமொழியில் சொல்ல வந்திருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாகப் பின் தங்கியிருந்தாலும் வங்கிக் கடன் நடைமுறைகள் மக்களை எப்படியெல்லாம் வதைக்கின்றன.உள்ளும் புறமும் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்வுப் பூர்வமாகச் சொல்லி இந்த சாமானியன் சாதாரணமானவன் இல்லை என்று காட்டியிருக்கிறார்.