சிங்கப்பூர் சலூன் படத்தில்பாலாஜி

0
36

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் பார்வையைஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். நேற்று நடைபெற்றஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலககோப்பைஅரையிறுதி போட்டி தொடங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சி நேரலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. வானொலி, கிரிக்கெட் இவற்றில் வர்ணனையாளராக பலரையும் காமெடி மூலம் பகடி செய்துவந்தவர் ஆர்.ஜே.பாலாஜி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகஅறிமுகமானார்.கதையின் பிரதான கதாபாத்திரமாக எல்கேஜி, மூக்குத்தி அம்மன் மற்றும் வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.இந்தப் படத்தின் பெயர் ‘சிங்கப்பூர் சலூன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது முதல் பார்வை போஸ்டரில்கையில் கத்தரி உடன் சலூன் கடையில் பணியாற்றுவது போல இருக்கிறார்  ஆர்.ஜே பாலாஜி. இந்த படம் வரும் 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here