சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன்

சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் இணையும் திரைப்படமான ‘விஸ்வம்பரா’ படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.
சிரஞ்சீவி தனது அடுத்த பிரம்மாண்ட படமான ‘விஸ்வம்பரா’ படத்திற்காக, சில நாட்களுக்கு முன்புதான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 பிரம்மாண்ட செட்களை படக் குழு அமைத்துள்ளது.இதற்கிடையில், இப்படத்தில்சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை த்ரிஷா இன்று நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து நடிகை திரிஷாவுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர்.முன்னதாக நடிகை திரிஷா,சிரஞ்சீவியுடன் ‘ஸ்டாலின்’ படத்தில் பணிபுரிந்துள்ளார்.
தற்போது மெகா மாஸ் ஃபேண்டஸி உலகை காட்டும் ‘விஸ்வம்பரா’ படத்தில், சிரஞ்சீவியுடனான மேஜிக் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்கலாம்.
UV கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக உருவாகிறது.
2025-ம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10-ம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.