சிவகார்த்திகேயனின்பிரின்ஸ் பட வியாபாரம் தொடங்கியது

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக மரியா என்கிற உக்ரைன் நாட்டு நடிகை நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார்/இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கி படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் வாங்கியுள்ளார். இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் திரையரங்க வெளியீட்டிற்குப் பின்னான ஓடிடி ஒளிபரப்பு ஆகிய உரிமைகள் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் இதுவரை விற்கப்படாத பெரிய விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சியும் இணைய ஒளிபரப்பு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனமும் வாங்கியுள்ளன. இவ்விரண்டு உரிமைகளுக்கும்
சுமார் நாற்பத்தைந்து கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்தமாகியுள்ளது.