சிவராஜ்குமார் நடிக்கும் பன்மொழிப்படம்

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார் நடிக்கும் பன்மொழி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர்சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் ‘சிவண்ணா எஸ்சிஎஃப்சி01’ (#ShivannaSCFC01) பான் இந்தியா படமாக தயாரிக்கப்படுகிறது.
சிவண்ணா என்று கன்னட சினிமாரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கன்னட நடிகர்சிவராஜ் குமார் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரியுடன் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். சிவராஜ் குமாரின் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கான்செப்ட் போஸ்டர் ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டது.

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் எஸ்சிஎஃப்சியின் (சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி) இந்த பான் இந்தியா திரைப்படத்தை விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தைத் இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார்.’விக்ரம் வேதா’ மற்றும் ‘கைதி’ புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

நேற்றுவெளியிடப்பட்டுள்ள டாக்டர் சிவராஜ் குமாரின் கான்செப்ட் போஸ்டர் மூலம் இத்திரைப்படம் ஒரு அதிரடி ஆக்க்ஷன் த்ரில்லர் என்பது அறிய முடிகிறது. சிவராஜ் குமாரின் கெட்டப்பும் போஸ்டர் வடிவமைப்பும் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.