போர்க்கள பின்னணியில் அமைந்த காதல் திரைப்படங்கள் பல ’உலக சினிமா’ எனும் அந்தஸ்தை பெற்றிருக்கின்றன
‘டைட்டானிக்’ போன்ற பல கோடி பேர் ரசித்த திரைப் படைப்புகள் காலம் கடந்தும் ‘கிளாசிக்’ படைப்புகளாக ரசிக்கப்பட்டு, போற்றப்பட்டு வருகிறது
அப்படியொரு பெருமைக்குரிய திரைக்காவியத்தை இயக்கி வெற்றி காண முயற்சித்த இயக்குநர்கள் எண்ணிக்கை அதிகம்
இந்திய திரையுலகில் அவற்றுள் ஒன்றாகச் அரங்கேற்றம் செய்யப்பட்டு வெற்றியை சுவைத்திருக்கிறது ஹனு ராகவபுடி இயக்கியுள்ள ‘சீதா ராமம்’.
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவுகின்றனர் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த சில தீவிரவாதிகள். இந்த சம்பவம் 1964ம் வருடங்களில் நடக்கிறது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து லண்டனில் இந்தியக் கொடி பறக்கும் ஒரு கார் மீது மதுபானத்தை ஊற்றி தீ வைக்கிறார் அப்ரீன் (ராஷ்மிகா மந்தனா) என்ற பாகிஸ்தானிய இளம்பெண்.
மேலே சொன்ன இரண்டு சம்பவங்களுக்கும் ’சீதா ராமம்’ என்ற டைட்டிலுக்கு என்ன சம்பந்தம்? அதைத்தான் சொல்லப் போகிறேன் என்று ‘பிளாஷ்பேக்’ உத்தியை பயன்படுத்தி கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹனு ராகவபுடி.
பாகிஸ்தானிய ராணுவத்தில் பணியாற்றிய உமர் தாரிக்கை தனது பணத்தேவைக்காக
(சச்சின் கடேகர்) சந்திக்கச் செல்கிறார் அவரது பேத்தியான அப்ரீன்அவர் இறந்துபோன தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைபவர், இந்தியாவில் ஹைதராபாதை சேர்ந்த சீதா மகாலட்சுமி எனும் பெண்ணுக்கு ஒரு கடிதத்தைக் கொண்டு சென்று சேர்த்தால் மட்டுமே அவரது சொத்துகள் கிடைக்கும் என்று வழக்கறிஞர் சொல்வதைக் கேட்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்
சீதாவைத் தேடும் பயணத்தில், ராம் (துல்கர் சல்மான்) என்பவர் பற்றி தெரிய வருகிறது.இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவில் லெப்டினண்ட் ஆக பணியாற்றியவர் ராம். உறவுகள் ஏதுமற்றவர். ஒருமுறை காஷ்மீரில் நடைபெறவிருந்த பெரும் மத கலவரத்தை தடுத்ததின் காரணமாக ஊடக கவனத்திற்கு உள்ளாகும் அவர் இந்தியாவெங்கும் அறியப்பட்ட ராணுவ வீரனாகிறார்
இந்தியா முழுவதுமிருந்து மூட்டைக் கணக்கில் அவருக்கு உறவுமுறை கொண்டாடிகடிதங்கள் வருகின்றன. அவற்றில், சீதா என்ற பெண் ராமை தனது கணவராக வரித்து எழுதிய அனுப்புனர் முகவரியில்லாகடிதம் தனித்த கவனத்தை பெறுகிறது துல்கரிடம்
ஒருகட்டத்தில், சீதாவைத் தேடி ராம் ஹைதராபாத் செல்கிறார். அவரை நேரில் சந்தித்து தன் காதலைச் சொல்கிறார்.
சீதா (மிருணாள் தாகூர்) என்பவர் யார்? அவர் ராமை உண்மையிலேயே காதலித்தாரா? அவர்கள் இருவருக்குமான காதல் கதை பாகிஸ்தானில் இருக்கும் ஒரு ராணுவ அதிகாரிக்கு எப்படி தெரிய வந்தது என்று திரையில் விரிகிறது ‘சீதா ராமம்’.
உண்மையிலேயே அறுபதுகளில் இந்த படத்தை உருவாக்கியிருந்தால், கண்டிப்பாக ஜெமினி கணேசனை நாயகனாகப் பயன்படுத்தியிருக்கலாம்.அந்த அளவுக்கு இன்னொரு ‘ஜெமினி’யாக திரையில் காதல் உணர்வுகளை பிழிந்து திகட்ட திகட்ட தருகிறார் துல்கர் சல்மான்.
நாயகியாக வரும் மிருணாள் தாகூர் முதல் பாதியில் அழகுப் பதுமையாகத் தோற்றமளித்ததற்கு மாறாக, இரண்டாம் பாதியில் முகத்தில் சோகத்தை அப்பிக் கொள்கிறார். அவர் ஒரு திறமையான நடிகை என்று சொல்லிக்கொள்ள பல காட்சிகள் படத்தில் வந்து போகிறது
சீனியர் நடிகர்களான சச்சின் கடேகர், பிரகாஷ்ராஜ், முரளி சர்மா, பூமிகா, ’பொம்மலாட்டம்’ ருக்மிணி, கவுதம் மேனன் என்று பலர் இதில் திரைக்கதை நகர்தலுக்கான முக்கியமான சில காட்சிகளில் நடித்திருக்கின்றனர்.
தெலுங்கு நகைச்சுவை நடிகர்களான சுனில், பிரியதர்ஷி கூட இரண்டு காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர்.
இப்படத்தின் ஆகப்பெரும் ஆச்சர்யம் ராஷ்மிகா மந்தனா. ’சச்சின்’ ஜெனிலியா போல லூசுப்பெண்ணாகவே பல படங்களில் வந்து போனவர் புஷ்பா படத்திற்கு பின் கிளாமர் குயினாக இந்தியா முழுவதும் ரசிக்கப்பட்டுவரும் ராஷ்மிகா
அப்ரீன் எனும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்
படத்தின் ஒவ்வொரு பிரேமையும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அளவிற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கின்றனர் பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.மிக நேர்த்தியாக காட்சிகளை அடுக்கியிருக்கிறது கோட்டகிரி வெங்கடேஸ்வராவின் படத்தொகுப்பு.அறுபது மற்றும் நாற்பதாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைப் பிரதிபலிப்பதில் விஎஃப்எக்ஸ் போலவே பைசல் அலிகானின் கலை வடிவமைப்பும் முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
காட்சியோடு ஒன்றவைக்கும் பின்னணி இசை மட்டுமல்லாமல் ’பிரியாதே’, ‘குறுமுகில்களை’, ‘ஹே சீதா’, ’கண்ணுக்குள்ளே’ என்று நான்கு காதிற்கினிய பாடல்களையும் தந்து வசீகரித்திருக்கிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். எளிமையையும் இயல்பையும் கலந்து ஒரு அழகான காதல் திரைப்படம் பார்க்கும் உணர்வை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறார்மதன் கார்க்கி தன் வசீகரிக்கும் வசனங்களால், பாடல்களால்
பரபரவென்ற திரைக்கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் கொஞ்சம் கூட திருப்தியைத் தராது.பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் ‘ட்விஸ்ட்’ இடைவேளையில் வந்தபோதும், பின்பாதி முழுக்க ராம் சீதா காதல் என்னவானது என்பதை நோக்கியே திரைக்கதை நகர்கிறது.
முழுக்க முழுக்க தெலுங்கில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் தமிழ் படம் பார்க்கும் உணர்வை வசனகர்த்தா மதன் கார்க்கியின் எழுத்துக்கள் ஏற்படுத்த தவறவில்லைகதை நிகழும் களம் காஷ்மீர், பாக்கிஸ்தான் ஹைதராபாத் என்பது தமிழ் பதிப்புக்கு ஏற்ப மாற்றப்படாவிட்டாலும், கடிதம் முதலான மொழி தொடர்பான அம்சங்களில் தமிழையே பயன்படுத்தியிருப்பது அழகு.
கசிந்துருகும் காதல் காவியத்தில் சர்வதேச அரசியல், பிரிவினைவாதம், மதம், அரசின் கையலாகாத நிர்வாகம் என எல்லாவற்றையும்கதை போக்கில் கதாபாத்திரங்கள் பேசினாலும் அழுத்தமாக பார்வையாளனுக்கு கடத்தப்படுகிறது
வாழ்வது எளிது சாவது கஷ்டம் என பாகிஸ்தான் ராணுவத்தை பற்றிய உரையாடலில் பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூரசித்திரவதைமுகாம்களை குறிப்பிடுவதாகட்டும்
காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தானி ஒரு மாத காலத்தில் இந்திய குடிமகன் என்பதற்கான சான்றிதழ்களை பெற்று விட்டதாக வரும் உரையாடல் இந்தியாவின் அரசு எந்திரத்தின் ஊழல்மயத்தை குறிப்பிடுவதாகட்டும்
நாட்டு பற்று இருக்கலாம் அது பிறநாட்டின் இறையான்மையை துன்புறுத்துவதாக இருக்ககூடாது என்கிற வசனங்கள் திரையரங்கை அதிரவைக்கிறது
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒரு கசிந்துருகவைக்கும்காதல் கதையை பார்த்து எத்தனை நாளாச்சு’ என்று புலம்புகிற சினிமா ரசிகர்களுக்காக கடுகளவுகூட ஆபாசம், வன்முறை இல்லாத ஒரு படைப்பைத் தந்திருக்கிறார் ஹனு ராகவபுடி.
காதலுக்கு நாட்டு எல்லையும், மதங்களும், அந்தஸ்தும் தடையில்லை என்பதை கூறுகிறது சீதாராமம்