கில்லி, வில்லு(2009) படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ் அதன் பின் கடந்த 12 வருடங்களில் விஜய்- பிரகாஷ்ராஜ் கூட்டணி இணைந்து நடிக்கவில்லை12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது செல்லத்துடன் பணியாற்றுவதாகவும், இது நீண்ட இடைவெளி என்றும் கூறியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
நடிகர் விஜய் நடிக்கும் இரு மொழி படமான(தெலுங்கு – தமிழ்) வாரிசுபடத்தில் விஜய் ராஷ்மிகா மந்தனா, பிரபு சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு, சங்கீதா, கிருஷ்ணா, சம்யுக்தா என பெரிய நட்சத்திர பட்டாளமே வாரிசு படத்தில் நடித்து வருகின்றனர் இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜயுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து மனம் திறந்திருந்தார்.,
வாரிசு படத்தில் நடித்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு,
படத்தின் கதையை இப்போது கூற முடியாது என்றும், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜயுடன் இணைந்திருப்பதைபகிர்ந்து கொள்வதாகவும் கூறியிருந்தார். கில்லி, வில்லு படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார்.
இருவரும் இப்போது வாரிசு படத்தில் இணைந்துள்ளனர்.
12ஆண்டுகளுக்குப் பிறகு தனது செல்லத்துடன் பணியாற்றுவதாகவும், இது நீண்ட இடைவெளி என்றும் கூறியுள்ளார். பிரகாஷ்ராஜ் விஜயைதான் செல்லம் என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் கில்லி படத்தில் கதாநாயகி த்ரிஷாவை அவர் அப்படி தான் படம் முழுக்க செல்லமாக கூறுவார் அப்போது இருந்து இன்றளவும் பிரகாஷ்ராஜ் படத்தில் பேசிய “செல்லம்” என்கிற டயலாக் இளைய சமூகத்தினர் மத்தியில் பொதுமொழியாகி அன்றாட வாழ்க்கையில் மனிதர்களின் பேச்சுவழக்கமாக மாறிவிட்டது