ஜிகர்தண்டா – 2 டிரைலர் பேசும் மதுரை அரசியல்

 விஜய்சேதுபதி நாயகனாக நடித்து வெளியான பீட்சா படத்தின் மூலம் 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பொறியியல் பட்டதாரியான கார்த்திக் சுப்புராஜ் 2014-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான‘ஜிகர்தண்டா’படம்அரசியல்வாதிகளை பற்றிய படம்சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கதாநாயகன் சித்தார்த்தை காட்டிலும்அசால்ட் சேது கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாபிசிம்ஹாவே 90%காட்சிகளில் இடம்பெற்றிருந்தார்கடைசியில் வரும் ட்விஸ்ட் மூலமாகத்தான் சித்தார்த் கேரக்டருக்கு முக்கியத்துவம்கிடைக்கும்.மதுரையை களமாக கொண்ட ஜிகர்தண்டா கதையில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிலும் மதுரை நகர செயலாளராகவும், மதுரை மாநகராட்சி தலைவராகவும் கோலோச்சிய மறைந்த முத்துவை நினைவுபடுத்தும் வகையிலேயே பாபிசிம்ஹா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது மதுரைகாரர் என்பதால் நேர்த்தியான திரைக்கதை மூலம் மிரட்டலாக படத்தை இயக்கியிருந்தார் பாபி சிம்ஹாவுக்கு அவ்வாண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது அதன் பின் கடந்த எட்டு ஆண்டுகளில் இறைவி, மெர்குரி, பேட்ட, மகான், ஜெகமே தந்திரம் போன்ற படங்களை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார் இவற்றில் எந்தப்படமும் வசூல் அடிப்படையில் வெற்றி பெறவில்லை இந்த நிலையில் ஜிகர்தண்டா படம் வெளியாகி எட்டு ஆண்டுகள்நிறைவு செய்யும் நாளன்று கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் தற்போது அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்அதனை தொடர்ந்து ஜிகர்தண்டா-2 படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானதுஜிதர்தண்டா டபுள் -X எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்னோட்டம் வித்தியாசமான முறையில் உள்ளதுமுன்னோட்டத்தின் தொடக்கத்தில் ஒரு குளத்தின் கரையில் உள்ள பனைமர திட்டில் நடிகர்எஸ்.ஏ.சூர்யா வந்து அமர்கிறார். குளத்திற்கு அருகில் உள்ள குடிசையில் ஒருவர் இரும்பு அடித்துக் கொண்டிருக்கிறார். அந்த அறையில் யானைத்தந்தங்கள் மற்றும் இரும்பு ஆயுதங்கள் நிறைந்துள்ளன. வெளியே இருக்கும் எஸ்.ஏ.சூர்யா மவுத் ஆர்கன் வாசிக்கிறார். அந்த இசையைக் கேட்டு இரும்பு அடித்துக் கொண்டிருந்தவர் திரும்புகிறார். அப்பொழுதுஇரண்டு கைத்துப்பாக்கிகளுடன் லாரன்ஸ் வெளியே வருகிறார். ப்ரீயட் படம் போலவே எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் தோற்றம் இருக்கிறது. இருவரும்  கவுபாய் கெட்டப்பில் இருக்கிறார்கள்.எஸ்.ஏ.சூர்யாவின் பின்னால் இருந்து பெரும் கூட்டம் ஒன்று குளத்தில் இறங்கி லாரன்ஸை நோக்கி ஓடி வருபவர்களில் பல்வேறு தரப்பினர் இருக்கிறார்கள். போலீஸ்காரர்கள், ஆயுதங்களுடன் உள்ளூர் மக்கள், அரசியல்வாதிகள் போல் வெள்ளை வேஷ்டி சட்டையுடன் ஒரு கூட்டம் முகத்தில் தேசியக் கொடியுடன்,அவர்கள் அருகில் நெருங்கிய உடன் தன் கையில் இருந்த கைத் துப்பாக்கிகளை கீழே போட்டு விட்டு பூமிக்கு அடியில் இருந்து கேமராவை கையில் எடுக்கிறார் லாரன்ஸ். அதனை க்ளிக் செய்வதுடன் டீசர் முடிகிறது. ஜிகர்தண்டா படத்தின் மாஸ் ஆன பிஜிஎம் உடன் முடிகிறது. டீசருக்கு முந்தைய போஸ்டரில் லாரன்ஸ் கையில் துப்பாக்கியும், எஸ்.ஏ.சூர்யா கையில் கேமிராவும் இருக்கும். டீசரின் முடிவில் கைத் துப்பாக்கி இருந்த லாரன்ஸ் கையில் கேமிரா வருகிறது எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் கூட்டணி என்பது எதிர்பாராத துமுந்தைய படத்தில் இருந்த எதுவும் இதில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது அப்படியென்றால் கார்த்திக் சுப்புராஜ்ஜிகர்தண்டாடபுள்-X ல் பேசப்போவது பத்திரிகைகள் பற்றியா சமகால அரசியல் பற்றியா என்பதை பற்றிய தெளிவு இல்லாத மர்ம முடிச்சுகளுடன் கூடியதாகவே இருக்கிறது