அதனை தொடர்ந்து எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்த கோவையை சேர்ந்தமறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடிக்கிறார். இப்படத்தை ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ படத்தை தயாரித்திருந்த அதே தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘ஜி.டி.என்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் யோகி பாபு, ஜெயராம், பிரியாமணி ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.