ஜெயம் ரவி நடிப்பில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் BTG Universal நிறுவனம் !!
நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பு துறையில் கோலோச்சி வரும் BTG Universal நிறுவனம் தயாரிக்கும்இரண்டு புதிய படங்களில் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் BTG Universal நிறுவனம், 20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்
ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்துள்ளது. டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனம் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் படைப்பாற்றல் மற்றும் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார். இந்நிறுவனம் சின்ன படம், பெரிய படம் என்று பாராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களுக்கு பிடித்தவாறு உருவாகும் படங்களை கொடுக்க இருக்கிறார்கள்.முன்னதாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படமான “டிமான்ட்டி காலனி 2” ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அடுத்ததாக இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில் நடிகர்கள் வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாகநடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ”ரெட்டதல” படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்ததாக ஜெயம்ரவியை வைத்து பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களை உருவாக்கவுள்ளது.
புதிய படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படங்களின் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.