தனுஷ்-வெற்றிமாறனின் பிரமாண்ட படைப்பு அசுரன் படம்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் 4வது முறையாக ஒரு படம் தொடங்கி வெற்றிக்கரமான முடியவும் உள்ளது. இப்படத்திற்கு அசுரன் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க ஒரு கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கின்றார்.

இவர் மட்டுமின்றி பிரகாஷ்ராஜ், பசுபதி என பல முன்னணி நடிகர்கள் நடிக்க, இயக்குனர் பாலாஜி சக்திவேலும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார்.

இந்நிலையில் பாலாஜி சக்திவேல் ஒரு பேட்டியில் ‘அசுரன் படம் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியின் பெஸ்ட் படம் மட்டுமில்லாமல், பெண்கள் கொண்டாடும் ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்கும்.

ஏனெனில் அந்த அளவிற்கு பெண்களின் வீரம் குறித்தும் இப்படம் பேசும்’ என கூறியுள்ளார்.