தமிழ்நாட்டில்சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாத உறவாகவே 1967 முதல் இன்றுவரை இருந்து வருகிறது தமிழ் சினிமாவின் வசனகர்த்தாக்களான மறைந்தஅறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திரை நட்சத்திரங்களாக வலம் வந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இவர்கள் அனைவரும் தமிழ்நாடு முதல்அமைச்சர்களாக பணியாற்றியவர்கள் அதனால் தமிழ் சினிமா ஆட்சியாளர்களின் செல்லக் குழந்தையாகவே கவனிக்கப்பட்டு வந்தது தொடக்ககாலத்தில்
திரைப்பட கலைஞர்களுக்கும், தொலைக்காட்சி வருகைக்கு பின் சின்னத்திரை கலைஞர்களுக்கும், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் வருடா வருடம் தமிழ்நாடுஅரசின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டு வந்தது
கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து சிறந்த கலைஞர்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கு அறிவிக்கப்படவில்லை அதற்கான காரணத்தையும் தமிழ்நாடு அரசு தெரிவிக்கவில்லை இந்த நிலையில் 13 ஆண்டு காலமாக அறிவிக்கப்படாமல்,இருந்த திரைப்படம், சின்னத்திரைக்கான விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணியே 2015-ம் ஆண்டுதான் துவங்கியது.2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்களை 2017-ம் ஆண்டுதான்அறிவிக்கப்பட்டது
அறிவித்த பின்பும் விருதுகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி நடத்தப்படவில்லைஅதிமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் வழங்கப்படாமல்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலைமாமணி விருதுகள் திடீர் என மொத்தமாக வழங்கப்பட்டன. அடுத்தபடியாக
திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவை நடத்த எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான
அதிமுக அரசு தயாராகி வந்த சூழலில் தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது அதனால் திரைப்படவிருதுவிழா நடைபெறாமல் இருந்தது
தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகளுக்குப் பின்பு 2015ல் தயாரிக்கப்பட்ட திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவை நடத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதுவரும்செப்டம்பர் 4-ம் தேதி மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் 2009-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரையிலான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது
இதற்கான அழைப்பிதழ்கள் விருது பெறும் கலைஞர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விருது பெறும் கலைஞர்களின் பட்டியலில் முக்கியமானவை
சிறந்த திரைப்படத்திற்கான விருது பெறும்படங்கள்
2009- பசங்க
2010- மைனா
2011- வாகை சூடவா
2012-வழக்கு எண் 18/9
2013- இராமானுஜன்
2014- குற்றம் கடிதல்(2014)
சிறந்த நடிகர் நடிகைகளைத்தான விருது பெறுபவர்கள்
2009-கரண், பத்மப்ரியா
2010-விக்ரம், அமலாபால்
2011-விமல், இனியா
2012-ஜீவா, லட்சுமிமேனன்
2013-ஆர்யா, நயன்தாரா
2014- சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ்
சிறந்த இயக்குநர்களுக்கான விருதுபெறுபவர்கள்
2009.-வசந்தபாலன்
2010-பிரபுசாலமன்
2011-ஏ.எல்.விஜய்
2012-பாலாஜி சக்திவேல்
2013-ராம்
2014- ராகவன்