இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள்
சங்கத்தின் பொதுக்குழு பிப்ரவரி 21 ஆம் தேதி சென்னை வடபழநியில் உள்ள கமலா திரையரங்கில்நடைபெற்றது
தற்போதுசங்கத்தின் தலைவராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இருக்கிறார்.அவர் தலைமையிலான இப்போதைய நிர்வாகிகள் மீண்டும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற நிலை பொதுக்குழுவில் இருந்திருக்கிறது.
ஏனெனில் ஒவ்வொரு பொதுக்குழுவிலும் அப்போதைய நிர்வாகத்துக்கு எதிரான குரல்கள் ஒலிக்கும்.ஆனால் இந்தப் பொதுக்குழுவில் இப்போதைய நிர்வாகம் குறித்து எந்த அதிருப்தியும் இல்லை,ஒரு எதிர்ப்புக்குரலும் இல்லை.
அதனால், தற்போதைய நிர்வாகிகள் அப்படியே போட்டியின்றி மீண்டும் தேர்வு செயயப்படுவார்கள்

என்று அனைவரும் நினைத்திருந்த நேரத்தில், தற்போதைய தலைவராக உள்ளஆர்.கே.செல்வமணி
நான் வருகிற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.
புதியவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் என்று அறிவித்திருக்கிறார்.
இயக்குநர்கள்சங்கத்தில் தலைவராக இருப்பதால்தான் அவர் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் அதன் அங்கமான 24 சினிமா சம்பந்தபட்ட சங்கங்களில் ஏதாவதொன்றில் நிர்வாகியாக இருக்கவேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் இயக்குநர்கள் சங்கத்தலைவர், தொழிலாளர்கள் சங்கத்துக்கும் தலைவராக இருக்கிறார். தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்காலம் முடியஓராண்டுக்கு மேல் இருக்கிறது.அது என்னவாகும்?
அதற்கு, இயக்குநர்கள் சங்கப் பொதுக்குழு ஒரு தீர்வு சொல்லியிருக்கிறது. மார்ச் 16 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சம்மேளனநிர்வாகத்துக்குள் வரமாட்டார்கள். ஆர்.கே.செல்வமணியின் பதவிக்காலம் இருக்கும்வரை அவர் நீடிக்கட்டும் என்பதைத் தீர்மானமாக நிறைவேற்றி சம்மேளன நிர்வாகத்துக்கு அனுப்பபட்டுள்ளது. ஆர்.கே.செல்வமணி
திரைப்படம் இயக்குவதை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. சினிமாசங்க நிர்வாகங்களில் மட்டும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். இப்போது அதிலிருந்தும் விலகுகிறார்.
அவருடைய மனைவி ரோஜா,ஆந்திர அரசியலில் தீவிரமாக இருக்கிறார்.அதனால், திரைப்படத்துறை செயல்பாடுகளிலிலிருந்து முற்றிலும் விலகி, அவருக்குத் துணையாக இவரும் அங்கே செல்வார் என்று சொல்கிறார்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில்,இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஓர் அணியும் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டது. அதில் ஆர்.கே.செல்வமணி அணியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர்.
அதேபோல கடந்தாண்டு போல தற்போது பதவியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு எதிராக யாரும் அணிதிரளவில்லை என்று சொல்லப்படுகிறது.அதனால்,இம்முறை தலைவர் பொறுப்புக்கு யார் வருவார்? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.கடந்தமுறை செயலாளராக இருந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தலைவர் பொறுப்புக்கும் அதேபோல கடந்தமுறை பொருளாளராக இருந்த இயக்குநர் பேரரசு செயலாளர் பொறுப்புக்கும் பொருளாளர் பொறுப்புக்குப் புதிய வரவாக இயக்குநர் சரண் ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
துணைத்தலைவர், துணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. மார்ச் 16 அன்று அதற்கான தேர்தல்நடக்கவிருக்கிறது.
தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் போட்டியிட்டுத் தேர்வானவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் சுமார் 2600 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் சுமார் இரண்டாயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.